புயல் பாதித்த இடங்களை வான்வழியாக பார்வையிட்ட மம்தா பானர்ஜி

புல்புல் சூறாவளியினால் மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2.73 லட்ச குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் பாதித்த இடங்களை வான்வழியாக பார்வையிட்ட மம்தா பானர்ஜி

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை வான்வழியாக பார்வையிட்டார்.

Kolkata:

மேற்கு வங்க மாநிலம் புல்புல் புயலினால் பாதிக்கப்பட்டது. புயலினால் பாதிக்கப்பட்ட தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை  வான்வழியாக பார்வையிட்டார். இதற்காக திட்டமிடப்பட்ட நிர்வாக கூட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். 

மாநில செயலகத்தில் அதிகாரிகளுடனான சந்திப்பை ரத்து செய்தததோடு மட்டுமல்லாமல் வடக்கு வங்காள பயணத்தையும் ஒத்தி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நம்கானா மற்றும் பக்காலியைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் வான்வழியாக பார்வையிடுவார். அதன்பின் நிர்வாக கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று தெரிவித்துள்ளனர். 

புல்புல் சூறாவளியினால் மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2.73 லட்ச குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

More News