'ஜூன் மாதம் பருவமழை குறைவாகவே பெய்யும்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தென்னிந்திய பகுதிகளில் பருவமழை வரும் ஜூன் 8-ம்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஜூன் மாதம் பருவமழை குறைவாகவே பெய்யும்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
Mumbai:

நாட்டின் பல பகுதிகளில் பருவமழை ஜூன் 8-ம்தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூனில் மழை குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதே நேரத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி ஓ.பி. ஸ்ரீஜித் கூறியுள்ளார். 

வழக்கமாக கிடைக்கும் பருவமழைதான் இந்தாண்டும் கிடைக்கும் என்றும், சராசரி அளவில் 96-104 சதவீதம் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பருவமழை ஜூன் முதல் வாரத்திலேயே தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு வாரம் தாமதாக தென்னிந்திய பகுதிகளில் நாளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

More News