தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை வெயில் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பல பகுதி வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பாக நல்ல மழை பெய்தது.


தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோடை காலம் தொடங்கியதையொட்டி தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் வற்றி வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. 

குறிப்பாக சென்னையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதனால் மழை ஏதும் பெய்யாதா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

கன்னியாகுமரி வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காணப்படுகிறது. இதேபோன்று வெப்பச்சலனமும் நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் 4 செ.மீ. மழையும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 3 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. திருச்சி, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................