This Article is From Apr 22, 2019

''தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

''தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாநிலம் முழுவதும் கோடை வெயில் தற்போது கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருவதால் மக்களை மழை வராதா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வரும் 25-ம்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம். இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.