தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கோடை மழை பெய்ததை தொடர்ந்து, இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் முடிவடையாததால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தமான் மற்றும் அரபிக்கடலில் கடந்த ஒன்றாம் தேதி மழைப்பொழிவு தொடங்கியது. அப்போதிருந்தே கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கேரளாவில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வெயிலின் வெப்பத்தை குறைக்கும் விதமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று கோடை மழை பெய்தது. திருச்சி, திண்டுக்கல், நாகை, மதுரை, நெல்லை, காவிரி டெல்டா பகுதியான திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழையானது தென் மாநிலங்களில் 64 முதல் 74 சென்டி மீட்டர் மழையை தரும், வெப்பநிலையைப் பொறுத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................