மத்திய பிரதேசத்தில் சுலபமாக வெற்றி பெறுவோம் - சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்தியபிரதேசத்தில் தொடர்ந்து 4-வது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக இல்லை.

மத்திய பிரதேசத்தில் சுலபமாக வெற்றி பெறுவோம் - சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் எளிதாக பெரும்பான்மை பெறுவோம் என்கிறார் சிவராஜ் சிங் சவுகான்

Datia (Madhya Pradesh):

மத்திய பிரசேதத்தில் பாஜக மிக சுலபமாக வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங்  சவுகான்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக  இல்லாத  சூழலில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.


மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பொறுப்பில் சிவராஜ் சிங்  சவுகான் இருந்து வருகிறார். தொடர்ந்து 15 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்து வருவதால் அக்கட்சிக்கு எதிரான அலைகள் மத்திய பிரதேசத்தில் காணப்படுகிறது.


இதேபோன்று தேர்தலுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள், மத்திய பிரதேசத்தில் பாஜக அவ்வளவு  எளிதாக வெற்றி பெறாது என தெரிவித்தன. இந்த நிலையில்,  தேர்தல் முடிவுகள் குறித்து சிவராஜ் சிங் சவுகான் பேட்டி அளிதுதுள்ளார்.  இதுகுறித்து கூறுகையில், ''சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதனால்  தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கடினமான காரியமாக இருக்காது. பெரும்பான்மை எளிதில் கிடைத்து விடும்'' என்று தெரிவித்தார்.


மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன.  இங்கு பெரும்பான்மை பெறுவதற்கு குறைந்தது 116  இடங்கள் தேவை. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பான்மையை பாஜக பிடிப்பது கடினம் என்று கூறப்பட்டுள்ளது.