This Article is From Apr 09, 2019

‘சொன்னதை செய்யலனா ராஜினாமாதான்!’- கமல் அனல் பறக்கும் பிரசாரம்

முன்னதாக மகேந்திரன் மற்றும் கமல் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, ‘விஷன் கோயம்புத்தூர் 2024’ என்ற தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

‘சொன்னதை செய்யலனா ராஜினாமாதான்!’- கமல் அனல் பறக்கும் பிரசாரம்

தமிழகம் இன்று அரசியல் புரட்சியின் விளிம்பில் இருக்கிறது- கமல்

ஹைலைட்ஸ்

  • மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் முதல் தேர்தல் இது
  • இந்த முறை கமல், தேர்தலில் போட்டியிடவில்லை
  • சட்டமன்றத் தேர்தலில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அப்படியில்லை என்றால், பதவி விலகுவோம்' என்று அதிரடியாக பேசியுள்ளார்.

cnet5on8

கோயம்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் பிரசாரம் செய்த கமல், மய்யம் கட்சி சார்பில் அத்தொகுதியில் போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‘நாங்கள் சில மணி நேரத்துக்கு முன்னர் கோயம்புத்தூர் தொகுத்திக்கென்று ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். அந்தத் அறிக்கையில் இருக்கும் அனைத்தும் செயல்படுத்தக் கூடியவைதான். அப்படி எங்களால் செயல்படுத்த முடியவில்லை என்றால், அதை ஆதாரபூர்வமாக நீங்கள் நிரூபித்தால், சம்பந்தப்பட்டவர்களின் ராஜினாமா கடிதத்தை வாங்கிக் கொடுப்பது என் கடமை.

965et0m

தமிழகம் இன்று அரசியல் புரட்சியின் விளிம்பில் இருக்கிறது. நாம் எல்லோரும் மாபெரும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். நீங்கள் ஏப்ரல் 18 ஆம் தேதி உங்கள் கடமையைச் செய்யுங்கள். நாங்கள் ஆட்சி அரியணைக்கு வரும்போது எங்களின் கடமையைச் செய்வோம்' என்றார்.

g3lfdtb8

முன்னதாக மகேந்திரன் மற்றும் கமல் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, ‘விஷன் கோயம்புத்தூர் 2024' என்ற தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கோவைத் தொகுதிக்கான நீர் மேலாண்மை முதல் விவசாயத்துக்கு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் வரை விரிவாக விளக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், சில நாட்களுக்கு முன்னர் கோவையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில்தான் வெளியிட்டார்.

.