This Article is From Jul 22, 2019

8 வழிச்சாலைக்காக யாரிடமும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்: எடப்பாடி

8 வழிசாலைக்காக யாருக்கும் நெருக்கடி தந்து நிலத்தை எடுக்க வேண்டும் என்ற அவசியம் அரசுக்கு இல்லை

8 வழிச்சாலைக்காக யாரிடமும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்: எடப்பாடி

8 வழிச்சாலைக்காக யாரிடமும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்: எடப்பாடி


8 வழிச்சாலை திட்டத்துக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலல் மாவட்டத்தில் இன்று நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு நூறு ஏரிகளை நிரப்பும் திட்டம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.

சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்படும் எனவும், இங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்படும் என்று அவர் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் புதிய சட்ட கல்லூரி தொடங்கப்படும் என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, 8 வழிசாலைக்காக யாருக்கும் நெருக்கடி தந்து நிலத்தை எடுக்க வேண்டும் என்ற அவசியம் அரசுக்கு இல்லை. விரைவுச்சாலை அமைப்பதற்கு 70 விவசாயிகள் நிலத்தை அளிப்பதாக மனு அளித்துள்ளனர்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு அல்ல, நவீன முறைப்படி அதி விரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் அமைய வேண்டுமெனில் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

மேலும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறும்பொழுது, அதில் இருக்கின்ற மிகைநீரை எடுத்து வறட்சியான ஏறி குளங்களில் நிரப்பப்படும் என்றார். உபரி நீரில் ஒரு சொட்டுகூட வீணாகாமல் எந்தெந்த வழியில் விவசாயிகள் பயன்படுத்த முடியுமோ, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம்  நிறைவேற்றும் என தெரிவித்தார். 

.