நீர் இருப்பு குறைந்தது : சென்னைக்கு குடீநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் இருப்புகளில் 10 சதவீதம் மட்டுமே நீர் உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நீர் இருப்பு குறைந்தது : சென்னைக்கு குடீநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பருவமழை பொய்த்ததும் நீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம்


ஹைலைட்ஸ்

  1. சென்னை நீர் ஆதார பகுதியில் தண்ணீர் குறைந்தது
  2. ஒரு மாதத்திற்கு தேவையான நீர் மட்டுமே இருப்பில் உள்ளது
  3. மழை பெய்ய தவறினால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்

நீர் இருப்பு குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பருவ மழை பொய்த்தது நீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 

சென்னையின் குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், வீராணம் ஏரிகளும், கிருஷ்ணா நதிநீர் திட்டமும் பூர்த்தி செய்கின்றன. வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் இந்த நீர் நிலைகளில் இருப்பு குறைந்து வருகிறது. 

இதேபோன்று கஜா புயலால் நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதிப்பு ஏற்பட்டதே தவிர சரியான மழைப்பொழிவு கிடைக்கவில்லை. இதனால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை. 

இதன்தொடர்ச்சியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் இருப்புகளில் 10 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கான நீர்த்தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................