This Article is From Oct 09, 2019

காவல் ஆய்வாளர் தலையில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு! - வீடியோ

காவல் ஆய்வாளர் பணியை செய்து கொண்டிருக்கும் சமயத்தில், ஸ்டேசனில் உள்ள மற்ற காவலர்களின் குரல்களை நம்மால் கேட்க முடிகிறது. அவர்களால் உதவ முடியவில்லை என்றாலும், அவர்கள் இந்த காட்சியை கண்டு சிரித்தபடி உள்ளனர்.

காவல் ஆய்வாளர் தலையில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு! - வீடியோ

அந்த வீடியோவில் இருப்பது ஸ்ரீகாந்த் திவேதி என உள்ளூர் ஊடங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

New Delhi:

உத்தர பிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு தனது கடுமையான பணிச்சூழலுக்கு மத்தியில் எதிர்பாராத ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

இது தொடர்பான வீடியோ ஒன்றை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில், பிலிபிட் மாவட்டத்தின் சாதர் கோத்வாளி காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தனது இருக்கையில் அமர்ந்த படி, கோப்புகளை பார்த்துகொண்டிருக்கிறார். அப்போது, அவரது தோள்பட்டை மீது குரங்கு ஒன்று ஏறி அமர்ந்த படி அவரது தலையில் பேன் பார்க்கிறது. 

இதுதொடர்பாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் ஸ்ரீவஸ்தவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, பிலிபிட்டில் உள்ள இந்த காவல்துறை அதிகாரிகளின் அனுபவம் நமக்கு கூறுவது என்னவென்றால், நீங்கள் பணியில் இருக்கும்போது தொந்தரவு செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்றால்... ஷிகாகாய் அல்லது வேறு சில நல்ல ஷாம்பூக்களைப் பயன்படுத்துங்கள் "என்று அவர் தெரிவித்துள்ளார். 
 


சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் இருப்பது ஸ்ரீகாந்த் திவேதி என உள்ளூர் ஊடங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பணியை செய்து கொண்டிருக்கும் சமயத்தில், ஸ்டேசனில் உள்ள மற்ற காவலர்களின் குரல்களை நம்மால் கேட்க முடிகிறது. அவர்களால் உதவ முடியவில்லை என்றாலும், அவர்கள் இந்த காட்சியை கண்டு சிரித்தபடி உள்ளனர்.

இதற்கிடையில், அதிகாரியின் பின்னால் உள்ள ஜன்னலின் வழியாக முதுகில் அமர்ந்திருக்கும் குரங்கை எவ்வாறு அகற்றுவது என்று பேசிக்கொள்கின்றனர். மேலும் சிலர் குரங்கை திசைதிருப்ப வாழைப்பழங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார் அதையும் நாம் கேட்கலாம்.

இந்த வீடியோவை ட்வீட்டரில் பார்த்த சிலர், அந்த குரங்கு இன்ஸ்பெக்டரின் நண்பராக இருக்கலாம் என்றும் குரங்கின் செயல்களை "இலவச 'சேவா' (சேவை)" என்றும் கூறி கமெண்ட் செய்துள்ளனர். 
 


சீர்ப்படுத்திக்கொள்வது என்பது குரங்குகளுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான தினசரி சடங்காகும். ஒருவருக்கொருவர் உண்ணி, பேன் மற்றும் பிற ஒட்டுண்ணி இல்லாமல் இருக்க உதவுவதைத் தவிர, பல்வேறு நபர்களிடையே சமூக பிணைப்புகளை வளர்க்கவும், வலுப்படுத்தவும் இது உதவுகிறது. மேலும், இது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும்.

எனினும், பொதுவாக, குரங்குகள் மனிதர்களை தங்கள் சீர்ப்படுத்தும் சடங்குகளில் சேர்க்காது. 
 

.