வைரல் வீடியோ: முதல்முறையாக வயலின் இசையை கேட்கும் குழந்தையின் ரியேக்சன்!

ரேச்சல் ஆட்ரி (Rachel Audrey) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அது தற்போது வைரலாகி, மூன்று மில்லியனுக்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வைரல் வீடியோ: முதல்முறையாக வயலின் இசையை கேட்கும் குழந்தையின் ரியேக்சன்!

வயலின் இசையை ரசிக்கும் 11 மாத குழந்தை!


அது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். உறவினர்கள் அனைவரும் கூடி சிறப்பாக அந்த பிறந்தநாளை கொண்டாடி முடிக்கின்றனர். கொண்டாட்டங்கள் ஓய்ந்தன. அது, சற்று ஓய்வெடுக்க வேண்டிய நேரம். அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு ஒரு பெண் அனைவரின் மத்தியில் நின்று, எல்லோருக்கும் கேட்கும் வகையில் வயலின் வாசிக்கிறார். அனைவரும், ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு குழந்தை ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த இசை துவங்கியதுமே, அதன் விளையாட்டு நின்றது. அந்த குழந்தை வயலின் வாசிக்கும் பெண்ணை திரும்பி பார்க்கிறது. இந்த குழந்தை, அந்த பெண்ணின் குழந்தைதான். இசை துவங்கியதுமே, குழந்தை தன் அன்னையை நோக்கி ஓடுகிறது. தன் அன்னையின் கால்களை முதலில் கட்டி அணைத்த அந்த குழந்தை பின் தன் அன்னையின் காலடியிலேயே அமர்ந்து, இசையை ரசிக்க ஆரம்பிக்கிறது.

இந்த நிகழ்வின் வீடியோவை, அந்த அன்னை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது தற்போது வைரலாகி, மூன்று மில்லியனுக்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது.

ரேச்சல் ஆட்ரி (Rachel Audrey) என்பவர்தான் அந்த வயலின் வாசித்த பெண். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த பெண்ணின் 11 மாதங்களே ஆன குழந்தை தான், அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் சுட்டி குழந்தை. 

ரேச்சல் பதிவிட்ட அந்த வீடியோ, இதோ!

அந்த வீடியோ குறித்த ட்வீட்கள்!

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................