உயிரை பனையம் வைத்து தண்ணீரில் சிக்கிய குடும்பத்தினரை மீட்ட பொது மக்கள்

மும்பையில் பெய்து வரும் கன மழையால், டலோஜா கொட்காவுன் பகுதியில் காரில் வந்த குடும்பதினரை தண்ணீர் சூழ்ந்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
Navi Mumbai: 

நவி மும்பை: நீரில் மூழ்கி கொண்டிருந்த காரில் மாட்டிக்கொண்ட குடும்பத்தினரை, கடும் முயற்சி செய்து பொது மக்கள் காப்பாற்றிய காட்சிகள் மொபைல் போனில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பெய்து வரும் கன மழையால், டலோஜா கொட்காவுன் பகுதியில் காரில் வந்த குடும்பதினரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிறிது நேரத்தில், காரின் அரை பகுதி தண்ணீரில் மூழ்க தொடங்கியது. அப்போது அங்கிருந்த கிராம மக்கள், கயிற்றை கொடுத்து குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

காரை சுற்றி நீர் சூழ்ந்ததால், காரின் மேல் பகுதியில் குடும்பத்தினர் ஏறி உட்கார்ந்துள்ளனர். அவர்களிடம் கயிற்றை கொடுத்து, மற்றொரு பக்கத்தில் ஐந்து நபர்கள் கயிற்றை இறுக்கமாக பிடித்து கொண்டனர். கயிற்றை பிடித்தபடி குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் காரில் இருந்து இறங்கி கயிற்றின் மற்றொரு பக்கத்தை அடைந்தனர். 

37 வயது அஷ்ரப் கலில் ஷேக், அவரது மனைவி ஹமிதா, இரண்டு குழந்தைகள் ஆகிய நால்வரும் ஊர் மக்களின் கடும் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஊர் பொது மக்கள் நாராயன் கங்காரம் படில், லஹு நாராயன் படில், லக்‌ஷ்மன் வமன் துமால், துல்சிராம், ரூபேஷ் ஆகியோர் குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

“மீட்கப்பட்ட குடும்பத்தினர் முதல் உதவி பெற்றவுடன் வீடு திரும்பினர். ஊர் மக்களின் இந்த உதவியை பாராட்ட வேண்டும்” என்று உள்ளூர் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................