மணக்கோலத்தில் இருந்த புது தம்பதியர் வெள்ளத்தில் இருந்து மீட்பு - வைரல் வீடியோ

சமீபத்தில் திருமணமான புது தம்பதியர் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
மணக்கோலத்தில் இருந்த புது தம்பதியர் வெள்ளத்தில் இருந்து மீட்பு - வைரல் வீடியோ

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் திருமணமான புது தம்பதியர் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். தப்பிக்க வழியில்லாமல், வெள்ள இடுக்கில் சிக்கியிருந்த தம்பதியர் உதவிக்கு காத்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போகாட்டா காவல் துறையினர், தம்பதியரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருமண உடை அணிந்திருந்த மணமகள் காரின் மேல் பகுதியில் ஏறி உட்கார்ந்திருந்தார். பிறகு, வெள்ளத்தில் சிக்கியிருந்த மணமகள், மணமகன், அவரது நண்பர்கள் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மணக்கோலத்தில் இருந்த புது தம்பதியரை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................