மோடியின் தமிழகம் வருகை : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெடித்தது வார்த்தைப்போர்

#GoBackModi, #MaduraiThanksModi, #TNWelcomesModi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. ட்விட்டரில் பதிவான பெரும்பாலான போஸ்ட்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு உதவி ஏதும் செய்யவில்லை என்றும், தமிழகத்தை புறக்கணித்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Go Back Modi என்ற வாசகத்துடன் கூடிய கார்ட்டூன்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Chennai: 

ஹைலைட்ஸ்

  1. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வருகிறார் மோடி
  2. Go Back Modi என்ற வாசகத்துடன் பதிவுகள் செய்யப்படுகின்றன.
  3. ட்ரெண்டிங்கில் #GoBackModi, #MaduraiThanksModi, #TNWelcomesModi

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். மதுரைக்கு செல்லும் அவர் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக பதிவுகள் செய்யப்படுகிறது. 

இதனால் #GoBackModi என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்ட போஸ்ட்களில் மத்திய அரசை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. பேரிடர் காலங்களில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக #GoBackModi என்ற பதிவின் கீழ் புகார்கள் கூறப்படுகின்றன. 

கஜா புயலின்போது 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். 11 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆனால் கஜா புயல் நிவாரண பணியின்போது தமிழகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதள பதிவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பெரும்பாலான பதிவுகளில் தமிழ்நாட்டின் வரைபடம் பெரியாரின் முகத்துடன் கூடியதாக இருப்பது போன்றும், அவர் Go Back Modi என்று சொல்வதைப் போன்றதுமான கார்ட்டுன் அதிகம் இருக்கின்றன. 

இதேபோன்று பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்ட் செய்து வருகின்றனர். #MaduraiThanksModi மற்றும் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்குகளில் மோடியை வரவேற்கும் போஸ்ட்கள் செய்யப்படுகின்றன. இங்கு நாம் குறிப்பிட்ட 3 ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளன. 

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றால் மத்திய அரசு மீது தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. 

இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில், ''மோடி எதிர்ப்புக்கு பின்னால் நாங்கள் இல்லை. இது மக்களின் கோபம். எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். இப்போது அது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். எதற்காக அடிக்கல் நாட்டு விழாவை தாமதம் செய்துள்ளனர்?. தேர்தல் வருவதால் இதுபோன்ற வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது'' என்றார். 

#GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகுவது இது இரண்டாவது முறை. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள மோடி வந்தார். அப்போது இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. பிரமாண்ட பலூன்களிலும் Go Back Modi என்று எழுதி மோடி எதிர்ப்பாளர்கள் பறக்க விட்டனர்.

மேலும் படிக்க -''தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டு கொண்டிருக்கிறது''- தமிழிசை

எதிர்ப்புகளை தவிர்க்க சாலை மார்க்கமாக வருவதை விட்டு விட்டு ஐ.ஐ.டி. மெட்ராசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். இன்று மோடி பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சிக்கு அருகே வைகோவின் மதிமுக கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மோடி எதிர்ப்பு பிரசாரங்களை பாஜக மறுத்திருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறுகையில், '' ஆன்லைனில் மோடிக்கு எதிராக பணம் செலவழிக்கப்பட்டு பிரசாரம் நடத்தப்படுகிறது. அவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும். அவர்களை நாங்கள் கண்டுகொள்ளவில்லை'' என்றார். 

மோடி எதிர்ப்பு பிரசாரம் என்பது சரியான அணுகுமுறை அல்ல என்று சிலர் கூறியுள்ளனர். அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் தனது ட்விட்டர் பதிவில், ''#GoBackModi என்ற ஹேஷ்டேக்கை இப்போது ட்ரெண்ட் செய்வது சரியான அணுகுமுறை அல்ல. அவர் மிகச் சிறந்த மருத்துவமனையை அமைக்க அடிக்கல் நாட்ட வருகிறார். எதிர்ப்பைக் காட்ட சில நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் அவரை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல'' என்று கூறியுள்ளார். 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................