ரூ. 300 கோடி வசூலை நெருங்கும் ஹிருத்திக் ரோஷனின் 'வார்' திரைப்படம்!!

தமிழில் போர் என பொருள்படும் வார் (WAR) திரைப்படம் வெளியாகி 17 நாட்கள் ஆன நிலையிலும் மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு குறையவில்லை. அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் இந்தியில் வெளியாகியுள்ளன. இருப்பினும், வார் வசூல் பாதிக்கப்படவில்லை.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரூ. 300 கோடி வசூலை நெருங்கும் ஹிருத்திக் ரோஷனின் 'வார்' திரைப்படம்!!

ஹிருத்திக் ரோஷன் - டைகர் ஷெரோப் நடிப்பில் முழு நீள ஆக்சன் படமாக வந்துள்ளது 'வார்'


New Delhi: 

தமிழ், தெலங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த அக்டோபர் 2-ம்தேதி வெளியான வார் திரைப்படம் ரூ. 300கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

ஹிருத்திக் ரோஷன் - டைகர் ஷெரோபின் அசத்தலான் ஆக்சனில் வார் திரைப்படம் கடந்த 2-ம்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இருவருமே தங்களது படங்களில் வியக்க வைக்கும் சண்டைக்காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக வைத்துள்ளனர். அவர்கள் சேர்ந்து நடித்தால் ரசிர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு படம் வெளியாவதற்கு முன்பு இருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வார் திரைப்படம் இருந்ததால், வசூலிலும் சாதனைகள் படைத்து வருகிறது. கடந்த 2-ம்தேதி வெளியான இந்த திரைப்படம் 17 நாட்களை கடந்தபோதிலும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 
 

:

வார் வசூல் குறித்து பிரபல சினிமா வல்லுனர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பதிவில், வசூலில் வார் திரைப்படம் முன்னிலை வகிக்கிறது. புதிய திரைப்படங்கள் வாருக்கு பின்னர் வெளிவந்தபோதிலும், வார் வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை. மொத்தமாக ரூ. 291.05 கோடி ரூபாயை இதுவரைக்கும் வார் திரைப்படம் வசூலித்திருக்கிறது என்று கூறியுள்ளார். 

இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். உலகின் பல நாடுகளில் இந்த திரைப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் சண்டைக் காட்சிகள் இருப்பதாக படம் பார்த்த சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................