ஊடக சர்ச்சைக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து ஊடகங்களை விமர்சித்து வருவதாக 300க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் கட்டுரை வெளியிட்டுள்ளன

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஊடக சர்ச்சைக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
Washington: 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து ஊடகங்களை விமர்சித்து வருவதாக 300க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் கட்டுரை வெளியிட்டுள்ளன.

“போலி ஊடகம்”, “ஊடகங்களே அமெரிக்க மக்களின் எதிரி” போன்ற கருத்துக்களை அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலே, ட்ரம்ப் தொடர்ந்து ஊடகங்களை தாக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பொது கூட்டங்களில், ஊடகங்களை குறித்து அவதூறாக பேசி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ட்ரம்ப் கூறிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஊடகங்கள் சார்பில் கட்டுரை வெளியிட்டன.

இதனை தொடர்ந்து, எதிர்ப்புக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், “அமெரிக்காவில் உள்ள ஊடகங்களுக்கு முழு கருத்து சுதந்தரம் உள்ளது. ஊடகங்கள் விரும்புவதை எழுதலாம், கருத்து தெரிவிக்கலாம். ஆனால், மக்களிடையே அரசியல் குழப்பும் ஏற்படுத்தும் வகையிலான போலி செய்திகள் அதிகளவில் வெளியாகின்றன. எனினும், இறுதியில் உண்மை வெல்லும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................