தினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூ. 1 லட்சம் : உண்மைதாங்க... இதுவும் ஒரு 100நாள் வேலை

இந்த இண்டர்ஷிப்பிற்கான தகுதிகள் இரவில் அதிக நேரம் நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து விட்டு இரவில் தொலைபேசி அறிவிப்புகளை ஆனந்தமாக புறக்கணிக்க வேண்டும்.

தினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூ. 1 லட்சம்  : உண்மைதாங்க... இதுவும் ஒரு 100நாள் வேலை

இண்டர்ன்ஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வேக்ஃபிட்டுடன் இணைந்து 100 நாட்கள் தரவுகளைப் பகிர்ந்த பின் ரூ. 1லட்சம் வழங்கப்படும். (Representative Image)

உங்களின் சொந்த வீட்டில் ஒன்பது மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைத்தால் எப்படியிருக்கும். இதெல்லாம் நடக்குமா..? யார் கொடுப்பா என்று கேள்வி எழுகிறதல்லவா...சந்தேகேமே பட வேண்டாம். புதிதாக தொடங்கப்பட்ட வேக்ஃபிட் என்ற ஸ்டார் அப் இந்த வேலையினை வழங்குகிறது. வேக்ஃப் பிட் வழங்கிய இந்த இண்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நபர்கள் ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் தூங்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். 

“ஒவ்வொரு இரவும் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்து தூங்கவேண்டும் என்று வேக்ஃபிட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இண்டர்ன்ஷிப் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. வேலை விவரம் குறித்து அவர்கள் குறிப்பிடுவது “வெறுமனே தூங்குங்கள்”என்பதுதான் தலையணை கொண்டு அடித்து விளையாடிய பின் 10-20 நிமிடங்களுக்குள் தூங்கிட வேண்டும். 

இந்த இண்டர்ஷிப்பிற்கான தகுதிகள் இரவில் அதிக நேரம் நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து விட்டு இரவில் தொலைபேசி அறிவிப்புகளை ஆனந்தமாக புறக்கணிக்க வேண்டும். 

பிசினஸ் இன்சைடரின் கருத்துப்படி, பயிற்சியாளர்களின் தூக்க முறைகள் கண்காணிக்கப்படும். அவர்கள் நிறுவனத்தின் மொத்தைகளில் தூங்க வேண்டும். மெத்தையில் படுப்பதற்கு முன்னும் பின்னும் தூக்கத்தை கண்காணிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். 

இண்டர்ன்ஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வேக்ஃபிட்டுடன் இணைந்து 100 நாட்கள் தரவுகளைப் பகிர்ந்த பின் ரூ. 1லட்சம் வழங்கப்படும். website இந்த லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம். 

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com