ரெண்டு புலி யாரு கெத்துனு காட்ட கர்ஜனையிட்டு சண்டைபோட்ட சம்பவம்… அலறவைக்கும் வைரல் வீடியோ!!

Viral Video: பகிரப்பட்ட ஒரே நாளில் 47,000-க்கும் மேற்பட்ட முறைகள் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

ரெண்டு புலி யாரு கெத்துனு காட்ட கர்ஜனையிட்டு சண்டைபோட்ட சம்பவம்… அலறவைக்கும் வைரல் வீடியோ!!

Viral Video: 2 நிமிடங்களைத் தாண்டி ஓடும் வீடியோவில், இரு புலிகளும் ஆக்ரோஷமாக கர்ஜனையிட்டு, தங்கள் கைகளால் ஒன்றையொன்று சரமாரியாக தாக்கிக் கொள்வது தெரிகிறது.

Viral Video: ஒரேயொரு புலி காட்டுக்குள் கர்ஜனையிட்டாலே பல கிலோ மீட்டர் தள்ளியும் அதன் கம்பீரக் குரல் கேட்கும். அப்படி இருக்கையில், இரண்டு புலிகள், தங்களின் அதிகாரத்திற்காக சண்டையிடும் சம்பவம் நடந்து அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய வனத் துறை அதிகாரி பிரவீன் கஸ்வானால், இந்த வீடியோ, ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு, காண்போரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் கிறங்கடித்துள்ளது. இந்த வீடியோவானது, மத்திய இந்திய வனப் பகுதியில் எடுக்கப்பட்டது என்னும் தகவலையும் தந்துள்ளார் பிரவீன். 

2 நிமிடங்களைத் தாண்டி ஓடும் வீடியோவில், இரு புலிகளும் ஆக்ரோஷமாக கர்ஜனையிட்டு, தங்கள் கைகளால் ஒன்றையொன்று சரமாரியாக தாக்கிக் கொள்வது தெரிகிறது. பார்க்கும்போதே அடிவயிற்றைக் கலக்கும் வகையில் உள்ளது புலிகளின் கர்ஜனையும் சண்டையும். 

புலிகள், எப்போதும் தங்கள் எல்லைக்குள் இன்னொருவர் வருவதை விரும்பாத உயிரினம். இன்னொரு புலி வந்தாலும் அதற்குப் பிடிக்காது. ஒரு ஆண் புலி, 60 முதல் 100 சதுர கிலோ மீட்டர் வனப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று டைகர்ஸ் வேர்ல்டு இணையதளம் தகவல் தெரிவிக்கிறது. 

“எல்லையைக் காப்பதற்காக இரண்டு வளர்ந்த புலிகள் சண்டையிடுவதைப் பாருங்கள். உங்கள் ஹெட்போன்ஸுடன் இந்த வீடியோவைப் பாருங்கள். அப்போதுதான், புலிகளின் கம்பீர கர்ஜனையை உணர முடியும்,” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் பிரவீன். 
 

பகிரப்பட்ட ஒரே நாளில் 47,000-க்கும் மேற்பட்ட முறைகள் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் லைக்ஸ்களையும் குவித்துள்ளன. 

வீடியோவில் வரும் புலிகள் முறையே யுவ்ராஜ் மற்றும் எம்வி3 என்றும், அவை கன்ஹா புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்தவை என்றும் தகவல் கொடுத்துள்ளார் இன்னொரு வனத் துறை அதிகாரியான சந்தீப் திரிபாதி.

“சிலருக்குத்தான் இதைப் போன்ற காணக்கிடைக்காத அரியக் காட்சியை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது,” என்று பொறாமையுடன் வீடியோவுக்குக் கீழ் கருத்திட்டுள்ளார் ஒரு ட்விட்டர் பயனர். இன்னொருவரோ, “மிக ஆக்ரோஷமான கர்ஜனைதான்,” என்கிறார். 


 

Click for more trending news