This Article is From Oct 03, 2019

பெல்லி டான்சில் அசத்திய பிரபல நடிகரின் மகள்!! வைரலாகும் வீடியோ!

தாளத்திற்கு ஏற்ப உடலை அசைக்கும் நளினம் பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் வீடியோ பார்க்கத் தூண்டுகிறது. இந்த வீடியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பெல்லி டான்சில் அசத்திய பிரபல நடிகரின் மகள்!! வைரலாகும் வீடியோ!

நடனக்கலைஞர் முத்ரேஜாவுடன் ஷனாயா கபூர்.

New Delhi:

பிரபல நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர், பெல்லி டேன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இணைய தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில் நடனக்கலை நிபுணர் முத்ரேஜாவுடன் போட்டி போட்டிக் கொண்டு பெல்லி டேன்ஸ் ஆடியுள்ளார் ஷனாயா. 

பின்னணியில் ட்ரம் இசை ஒலிக்க, அதற்கேற்றாற்போல் இருவரும் நளினமாக உடலை அசைக்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு ஸ்டெப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
 

:

19 வயதாகும் ஷனாயா கருப்பு நிற மேலாடை மற்றும் கீழாடைகளை அணிந்து தேவதை போல் காட்சி தருகிறார். இந்த வீடியோவை, நடனக்கலை நிபுணர் முத்ரேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

இதேபோன்று இன்னொரு வீடியோவுக்கு டீசரையும் வெளியிட்டுள்ளார் முத்ரேஜா. இதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

சில நாட்களுக்கு முன்பாக ஷனாயாவின் உறவினரும், நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் பெல்லி டேன்ஸ் ஆடினார். இதுவும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது. 
 

தற்போது வரையில் ஷனாயா கபூர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆகவில்லை. ஆனால் விரைவில் அறிமுகம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'தி கார்கில் கேர்ள்' என்ற படத்தில் ஜான்வி கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு துணை இயக்குனராக ஷனாயா பணியாற்றினார். 

.