வைரல் வீடியோ: ரசிகர்களுடன் ரசிகராய் படம் பார்த்த ராகுல் காந்தி

பிவிஆர் சாணக்கியாவில் ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி திரைப்படத்தை ராகுல் காந்தி பார்க்கும் வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
வைரல் வீடியோ: ரசிகர்களுடன் ரசிகராய் படம் பார்த்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவருடன் உரையாடினார்.


New Delhi: 

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ராகுல் காந்தி புதன்கிழமை டெல்லியில் உள்ள மல்டிபிளெக்ஸில் ஒரு பொதுவான குடிமகனைப் போல் திரைப்படத்தை பார்த்தார். 

பிவிஆர் சாணக்கியாவில் ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி திரைப்படத்தை ராகுல் காந்தி பார்க்கும் வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி விஐபியாக நடந்து கொள்ளாதது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோவில் ராகுல் காந்தி தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவருடன் உரையாடுவதையும், பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்ப்பதை காண முடிந்தது.  புதன்கிழமை அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி பல வார ஊகங்களை  முடித்து வைத்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு மே25 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் 542 இடங்களில் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸால் வெல்ல  முடிந்தது. தேர்தலின் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முன்வந்தார்.

ராகுல் காந்தி உத்திர பிரதேசத்தின் அமேதியில் தோல்வியடைந்தார். பாஜகவின் ஸ்மிருதி இராணி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................