டிவி விவாதத்தின்போது ரிப்பேரான நாற்காலி! தொப்பென்று தரையில் விழுந்த விருந்தினர்!! #Video

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அசம்பாவிதம் ஏற்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
டிவி விவாதத்தின்போது ரிப்பேரான நாற்காலி! தொப்பென்று தரையில் விழுந்த விருந்தினர்!! #Video

வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.


பாகிஸ்தான் நாட்டில் டிவி விவாதத்தின்போது நாற்காலி ஒன்று ரிப்பேரானதால் அதில் அமர்ந்திருந்த விருந்தினர் தொப்பென்று தரையில் விழுந்தார். இந்த வீடியோ காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தானில் ஜி டிவி என்ற செய்தி சேனல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 16-ம்தேதி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் மசார் பர்லாஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பர்லாஸ் அமர்ந்திருந்த நாற்காலி ரிப்பேரானது. இதையடுத்து அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த காட்சிகள் அனைத்தும் நேரலையாக டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பர்லாஸ் விழும் காட்சியை மட்டும் சிலர் செல்போனில் படம் பிடித்து அதனை இணைய தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தின்போது டிவி விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் அரசியல் தலைவர் ஒருவரால் தாக்கப்பட்டார். இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................