This Article is From Jan 17, 2019

பிரேசிலில் புதுமையான 'ஸ்பைடர்' மழை..! #ViralVideo

பிரேசில் நாட்டில் மைனாஸ் கிரயாஸ் என்னும் இடம் உள்ளது. அங்கு விசித்திரமான ஒரு மழை பெய்துள்ளது

பிரேசிலில் புதுமையான 'ஸ்பைடர்' மழை..! #ViralVideo

ஸ்பைடர் மழை பெய்யும் வீடியோ

பிரேசில் நாட்டில் மைனாஸ் கிரயாஸ் என்னும் இடம் உள்ளது. அங்கு விசித்திரமான ஒரு மழை பெய்துள்ளது. ஆசிட் மழை, பனி மழை என பல வகையான மழைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஸ்பைடர் மழை கேள்விப்பட்டிருக்கிறோமா..? அப்படிப்பட்ட ஸ்பைடர் மழை தான் பிரேசிலில் பெய்துள்ளது.

ஜொவா பெட்ரோ என்பவர் இதை வீடியோ எடுத்துள்ளார். அதனை அவரது தாய் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரல் ரகம். அந்த வீடியோவில் எட்டுகால் பூச்சிகள் வானில் இருந்து கீழே விழுவது போல் தெரிகிறது.

கடும் வெயில் மற்றும் ஈரப்பதமான நாட்களில் இது போன்ற எட்டு கால் பூச்சி 'மழை' பெய்யும் என சொல்லப்படுகிறது.

 

 
 

'உண்மையில் அது மழையல்ல. இது ஒரு வகை எட்டுகால் பூச்சிகள் காற்றி/ல் வலைகள் விரித்து தன் இரையை பிடிக்கக் காத்துக்கிடக்கும் காட்சி. வெகு தூரத்தில் இருந்து மக்கள் பார்ப்பதால், அந்த சிலந்தி வலைகள் தெரிவதில்லை. அதனால் தான் எட்டுகால் பூச்சிகள் கீழே விழுவது போல் தெரிகின்றன' என ஆய்வாளர் அடல்பெல்டொ தெரிவித்தார்.

இதைப்போலவே சென்ற ஆண்டு, கிரேக்க மாகாணத்தில் எட்டுகால் பூச்சி 'மழை' பெய்தது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.