This Article is From Apr 27, 2020

துள்ளி குதிக்கும் கங்கை டால்பின்; இணையத்தை மிரட்டும் வைரல் வீடியோ!

கங்கை நதியில் டால்பின் இருக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஆகாஷ் தீப் பாத்வான் பகிர்ந்துள்ளார்.

துள்ளி குதிக்கும் கங்கை டால்பின்; இணையத்தை மிரட்டும் வைரல் வீடியோ!

உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் டால்பின் மீன்கள் இருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், உத்தர பிரதேசத்தின் மீரட் அருகே உள்ள கங்கை நதி டால்பின் நீந்தி செல்வதை காட்டுகிறது. இது முதன்மையாக கங்கை மற்றும் பிரம்ம்புத்ரா நதிகளில் காணப்படும். அதேபோல், இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளங்களில் உள்ள துணை நதிகளில் காணப்படுகிறது. 

கங்கை டால்பின் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு என்ற சிறப்பை பெற்றது. அத்துடன் அழிவுக்கு உள்ளாகும் பாதுகாக்கப்பட்ட நதி டால்பின் ஆகும். அதனால், சமூகவலைதளங்களில், இதனை வனவிலங்கு பிரியர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். 

கங்கை நதியில் டால்பின் இருக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஆகாஷ் தீப் பாத்வான் பகிர்ந்துள்ளார். அதில், மீரட் அருகே கங்கை நதியில் இந்த டால்பினை காண்பது அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

கங்கை நதி டால்பின், ஒரு காலத்தில் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா நதி அமைப்பில் வாழ்ந்த நமது தேசிய நீர்வாழ் விலங்கு ஆகும். அவை, தற்போது அழியும் ஆபத்தில் உள்ளது" என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இன்று காலை சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஏற்கனவே 10,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதில், பலரும் ஆச்சர்யமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் தாங்கள் கங்கை டால்பினை பார்த்த அனுபவம் குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதில் கமெண்ட் பிரிவில், கங்கை டால்பின் பெரும்பாலும் கங்கையின் பகுதிகளில் காணப்படுகிறது. அங்கு மீன்கள் ஏராளமாகவும், நீரோட்டம் மெதுவாகவும் இருக்கும். 

Click for more trending news


.