தடதடவென குலுங்கிய விமானம்… சாதுர்யத்தால் சமாளித்த விமானி! #திக்திக்வீடியோ

இதுவரை இந்த வைரல் வீடியோவை 29 லட்சம் பேர் பார்த்து, விமானிக்கு ‘வாவ்’ சொல்லி வருகின்றனர்

தடதடவென குலுங்கிய விமானம்… சாதுர்யத்தால் சமாளித்த விமானி! #திக்திக்வீடியோ

ஐதராபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, லேண்டிங்கின் போது தடதடவென குலுங்கியுள்ளது.

New Delhi:

ஐதராபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, லேண்டிங்கின் போது தடதடவென குலுங்கியுள்ளது. பெரும் விபத்துக்குளாகியிருக்க வேண்டிய நிலையில், விமானத்தை ஓட்டிய விமானி சாதுர்யமாக விபத்தைத் தவிர்த்துள்ளார். இச்சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதுவரை இந்த வைரல் வீடியோவை 29 லட்சம் பேர் பார்த்து, விமானிக்கு ‘வாவ்' சொல்லி வருகின்றனர். பலர், ‘விமானின்னா இப்டி ஓட்டணும்', ‘தொழில் சார்ந்த விமானியின் திறன் வெளிப்பட்டுள்ளது', ‘வெல் டன் பைலட்' என்று பதிவிட்டு ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். 

 

வெள்ளிக் கிழமை, ஐதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து டேக்-ஆஃப் ஆன, பிரிட்டிஷ் ஏர்வேஸ் 276 விமானம் லண்டனில் 18 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்க முயன்றது. ஆனால், அப்போது வானிலை சூழல் மிகவும் மோசமாக இருந்ததால், விமானம் தடதடவென அதிர்ந்தது. ஒரு கட்டத்தில் விமானி, விமானத்தை சரியாக தரையிறக்க முடியாது என்பதை சுதாரித்து மீண்டும் டேக்-ஆஃப் செய்தார். 
 

More News