சமூக வலைத்தளமான ட்விட்டரில், #WhatsAppwonderbox என்ற ஹாஷ்டாக் பயன்படுத்தி மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆனந்த் மகேந்திரா, வித்தியாசமான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், டயரில் சாகசம் செய்யும் சிறுவனின் வீடியோவை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் வைரலான அந்த வீடியோவில், ஒரு சிறுவன் உடலை வளைத்து டயரில் நுழைகிறான். அதுமட்டுமில்லாது, டயருடன் சேர்ந்து உருண்டு செல்கிறான். அச்சரியமாக, மீண்டும் தனது கால்களால் டயரை உருட்டிக்கொண்டு சாகசம் செய்தபடி திரும்பி வருகிறான். சிறுவனின் சாகசத்தை கண்டு பலரும் ட்விட்டர் வியப்பில் உள்ளது
கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்த வீடியோவை பகிர்ந்த திரு.ஆனந்த் மகேந்திர, "குழந்தைகளின் பொழுது போக்கு நேரங்களில், புது வழிகளில் மகிழ்ச்சி தருணங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவை 12,800 பேர் லைக் செய்து, 2,900 பேர் ரீட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Click for more
trending news