This Article is From Apr 09, 2020

கருப்பாக பாறையில் ஊர்ந்த விநோத உயிரினம் - கதிகலங்கிய ட்விட்டர்… வைரல் வைரல் வீடியோ!

Viral Video: இது ஒரு பாட்டில் லேஸ் புழு என்றும், கிட்டத்தட்ட 180 அடி வரை இது வளரும் என்றும் சொல்லப்படுகிறது.

கருப்பாக பாறையில் ஊர்ந்த விநோத உயிரினம் - கதிகலங்கிய ட்விட்டர்… வைரல் வைரல் வீடியோ!

Viral Video: வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து 19.5 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. பலரும் அதிர்ச்சிக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். 

Viral Video: ட்விட்டரில் சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, பலரை கதிகலங்க வைத்து வருகிறது. சிலருக்கு அந்த வீடியோ கடும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்துள்ளது. வீடியோவில், பாறையின் மீது கருப்பு நிறத்தில் ஒரு விநோதமான உயிரினம் ஊர்ந்து செல்கிறது. 

அதை ஒருவர் கத்தியால் கீறுகிறார். தொடர்ந்து அந்த உயிரினம் பாறையின் மீது ஊர்ந்தபடி இருக்கிறது. 14 நொடிகளே ஓடும் இந்த வீடியோ படுவைரலாகியுள்ளது. 

‘ஸ்பைடர் மேன்' கார்ட்டூன் மற்றும் திரைப்படங்களில் ‘வெனாம்' என்கிற கற்பனை கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது இந்த உயிரினம். இதனால், வீடியோவைப் பார்த்த பலர் அந்த கேரக்டரோடு இந்த உயிரினத்தை ஒப்பிட்டு வருகிறார்கள்.

வீடியோவைப் பகிர்ந்த ட்விட்டர் பயனர் ஒருவர், “யாருக்காவது இது என்னவென்று தெரியுமா?” என்கிறார். 

வீடியோவைப் பார்க்க:

வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து 19.5 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. பலரும் அதிர்ச்சிக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். 


“ஏற்கெனவே நாம் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளோம். இப்போது இது வேறா. கண்டிப்பாக இது வெனாம்தான்,” என்கிறார் ஒரு ட்விட்டர் பயனர். 

“அந்த உயிரினத்தை இப்படி கத்தியால் குத்துவது சரி கிடையாது,” என்று வருத்தப்படுகிறார் இன்னொருவர்.

மற்றொருவரோ, “ஜோக்ஸ் இருக்கட்டும். உண்மையில் இது என்ன?” என்கிறார். 

இது ஒரு பாட்டில் லேஸ் புழு என்றும், கிட்டத்தட்ட 180 அடி வரை இது வளரும் என்றும் சொல்லப்படுகிறது. தன்னைத் தாக்க வரும் வேட்டையாடி மீது இந்தப் புழு, ஒரு வித நஞ்சைப் பாய்ச்சுமாம். அதனால் அந்த வேட்டையாடி, அசைய முடியாமல் கீழே விழுமாம்.
 

Click for more trending news


.