Viral Video: லிப்ட்டில் சிக்கிக் கொண்ட நாய்; உயிர் தப்பியதா…?

18.9 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது

Viral Video: லிப்ட்டில் சிக்கிக் கொண்ட நாய்; உயிர் தப்பியதா…?

20 நொடிகளுக்குபின் நாயின் கழுத்துப்பட்டையை கழட்டி நாயை காப்பாற்றுகிறார்.

டெக்சாஸ் நகரில் ஒருவர் லிஃப்ட் கதவில் சிக்கிய நாயைக் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறிய நாயை காப்பாற்றிய காட்சி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து  பலரும் அந்நபரை பாராட்டி வருகின்றனர். 18.9 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மதிஸ் (27) திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, சம்பவம் நடந்ததாக என்.பி.சி செய்தி தெரிவிக்கிறது. ஒரு பெண் தனது பொமரேனியன் நாயுடன் லிப்டிற்குள் நுழைகிறார். நாயை பிடித்திருக்கும் கயிறு நீளமாக உள்ளது. பெண் லிப்ட்டுக்குள் நுழைந்து விடுகிறார்.

நாய் நுழைவதற்குள் லிப்ட் மூடிவிடுகிறது. லிப்டிலிருந்து வெளியேறிய நபரான மதிஸ் நாயின் கழுத்தில் உள்ள பட்டையை கழற்ற போராடுகிறார். 20 நொடிகளுக்குபின் நாயின் கழுத்துப்பட்டையை கழட்டி நாயை காப்பாற்றுகிறார். 

19 மில்லியனுக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இணையவாசிகள் நாயின் உரிமையாளரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் மதிஸ் “லிப்ட் கதவு மூடியதும் அப்பெண் கத்த தொடங்கியுள்ளார். லிப்ட் கீழே வந்ததும்  அப்பெண் கண்களை துடைத்துக் கொண்டிருந்தார். நாயின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் என்று நினைத்தாக கூறினார்.

அப்பெண் நாயை காப்பாற்றிய மதிஸ்க்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். “நான் அணைத்துக் கொண்டேன். அப்பெண் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்” என்று தெரிவித்தார். 

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com