சுறா மீனைக் கவ்விச் செல்லும் பிரமாண்ட பறவை..! - திகைக்க வைக்கும் வைரல் வீடியோ

பலரும் பறவைக் கவ்விச் செல்வது சுறா மீன் இல்லை என்றும் வாதிட்டனர். 

சுறா மீனைக் கவ்விச் செல்லும் பிரமாண்ட பறவை..! - திகைக்க வைக்கும் வைரல் வீடியோ

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரையில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு என்பது பல வகைகளில் விசித்திரமானது. கொரோனா வைரஸ், பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுப்பு என்று அதிர்ச்சிகளை தந்து கொண்டே இருக்கிறது. அந்தப் பட்டியலில் ஒரு வீடியோவும் இணைந்துள்ளது. ஒரு கடற்கரை ஓரத்தில் பிரமாண்ட அளவில் இருக்கும் ஒரு பறவை, சுறா மீன் போன்ற ஒரு மீனைக் கவ்விச் செல்வது வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களால், உண்மையிலேயே சுறா மீனைத் தூக்கிச் செல்லும் அளவுக்கு உலகில் ஒரு பறவை இருக்கிறதா என விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரையில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனரான கெல்லி புர்பாஜ், என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “கழுகு? பருந்து? மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தப் பறவை” என்று கேள்விகளுடன் காணொலியைப் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவைப் பகிர்ந்ததிலிருந்து சுமார் 15 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் கருத்திட்டும், தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள். 

‘Tracking Sharks' என்னும் பிரபல ட்விட்டர் கணக்கும், இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘சுறா மீனை கவ்விச் செல்லும் இந்த பறவையின் பெயர் என்னவென்பது யாருக்காவது தெரியுமா?' எனக் கேள்வி கேட்டுள்ளது. வீடியோவைப் பார்க்க:

போஸ்டுக்குக் கீழ், ‘இயற்கை விந்தையானது,' என ஒருவர் பதிவிட, 

இன்னொருவர், ‘இது மிகவும் நம்பமுடியாத வகையில் உள்ளது,' என ஆச்சரியமுறுகிறார். 

பலரும் பறவைக் கவ்விச் செல்வது சுறா மீன் இல்லை என்றும் வாதிட்டனர். 
 

 

அது என்னப் பறவை என்ற கேள்விக்குப் பலரும் ஓஸ்ப்ரே (Osprey) என்னும் பெயரைத்தான் முன் மொழிந்தனர். இந்த பறவையினம், மீன்களைச் சாப்பிட்டு உயிர் வாழுபவை. 

Click for more trending news