தொப்பையில் இருந்து சிக்ஸ்பேக்!! இணையத்தில் வைரலாகும் ஹிருத்திக் ரோஷன் ஒர்க் அவுட் வீடியோ!

உடற்பயிற்சியில் அதிக அக்கறையும், கவனமும் ஆர்வமும் கொண்டவர் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். அவரது கட்டுக்கோப்பான உடல் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தொப்பையில் இருந்து சிக்ஸ்பேக்!! இணையத்தில் வைரலாகும் ஹிருத்திக் ரோஷன் ஒர்க் அவுட் வீடியோ!

சமீபத்தில் ஹிருத்திக் நடிப்பில் வெளிவந்த 'வார்' திரைப்படம் மெகா ஹிட்டானது.


New Delhi: 

கடின உடற்பயிற்சிகள் மூலம் தொப்பை வயிற்றில் இருந்து சமீபத்தில் சிக்ஸ்பேக்கிற்கு மாறியுள்ளார் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். அவரது ஒர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'சூப்பர் 30' என்ற படதில் சமீபத்தில் நடித்திருந்தார். பீகாரை சேர்ந்த கல்வியாளராக அவரது கேரக்டர் இந்தப் படத்தில் இருக்கும். இதற்காக தனது கட்டுடலை மாற்றி, ஹிருத்திக் தொப்பையாக காட்சி தந்தார். 

படம் வெளியாகி ஹிட்டடித்த பின்னர் அடுத்த படமான 'வார்' என்ற படத்திற்கு அவர் தயாராக வேண்டியிருந்தது. இந்தப் படத்தில் மீண்டும் சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாற வேண்டும் என்பதால் அதற்காக கடும் பயிற்சிகளை ஹிருத்திக் மேற்கொண்டார். 

நீண்ட முயற்சிக்குப் பின்னர், அவர் தொப்பையில் இருந்து சிக்ஸ்பேக்கிற்கு மாறினார். இந்த நிலையில் அவரது சேஞ்ச் ஓவர் தொடர்பான வீடியோ ஹிருத்திக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் ஃபிட்டான உடலுக்கு திரும்ப என்னென்ன பயிற்சிகளை எல்லாம் செய்தார் என்பது மிக சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. 
 

Check out the video here:

Transformation film

A post shared by Hrithik Roshan (@hrithikroshan) on

 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிருத்திக்கின் ரசிகர்களும், ஜிம் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்துள்ளனர். 

உடற்பயிற்சியில் அதிக அக்கறையும், கவனமும் ஆர்வமும் கொண்டவர் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். அவரது கட்டுக்கோப்பான உடல் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................