
முகம்மதுவின் குரல் கட்டளைகளுக்கு சிவப்பு நிற பைக் டார்சன் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை வீடியோவில் பார்க்கலாம்.
ஒவ்வொருவரும் வாங்கிய மோட்டார் பைக்கினை தங்களின் விருப்பத்திற்கு விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற அமைப்பார்கள். இந்த மாற்றியமைக்கப்பட்ட பைக் மட்டும் இதன் சிறப்பிற்காகவே இணையத்தில் பேசப்பட்டுவருகிறது.
பைக்கின் உரிமையாளரான முகம்மது சயித் உத்தர பிரதேசத்தில் உள்ள பரெல்லியில் வசித்து வருகிறது. இவர் தன்னுடைய பைக்கிற்கு டார்சான் என்று பெயரிட்டுள்ளார். இந்த பைக், முகம்மதுவின் குரல் கட்டளைக்கு பதிலளிக்கிறது மேலும் நாணயங்களை மினி ஏடிஎம் வழியாக விநியோகிக்கவும் செய்கிறது.
பைக்கின் வீடியோவை வியாழக்கிழமை ஹனி சக்சேனா என்பவர் யூட்யூப்பில் பகிர்ந்துள்ளார். பகிரப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி தளங்களில் வைரலாகியுள்ளது. 70 வயதான முகம்மதுவின் குரல் கட்டளைகளுக்கு சிவப்பு நிற பைக் டார்சன் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை வீடியோவில் பார்க்கலாம்.
பைக் எவ்வாறு ஸ்டார் செய்கிறது, இசையை இயக்குகிறது மற்றும் அதன் ஏடிஎம் குரல் கட்டளைக்கு ஏற்ப 5 ரூபாய் நாணயத்தை எவ்வாறு விநியோகிக்கிறது என்பதையும் காணலாம்.
Meet Bareilly's Chacha Sayed
— Rishi: (@RationalRishi) October 12, 2019
Only GOD knows what technology he's using????
His bike hs coin ATM works on voice command
His bike gets on-off centerstand itself over motion command
His bike starts on voice command
What a great example of desi engineering???????????? pic.twitter.com/wR6vCbJKId
யூ ட்யூப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தின் படி, முகம்மது சயீத் சுய பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன், ஸ்டண்ட் மேன், சேல்ஸ் மேனாக இருக்கிறார். இந்த வீடியோவை 17,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். அவருக்கு பாராட்டுகளும் சேர்ந்துள்ளது.
ட்விட்டர் பயனாளர் வீடியோவை பகிரும்போது “என்ஜினியரிங் பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு” பணிக்கு என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் “இந்தியாவின் நம்பமுடியாத திறமை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Click for more trending news