ராட்சத பல்லி vs ரெண்டு நாய்… சண்டையில் வெற்றி பெற்றது யார்..? - அலறவிடும் வைரல் வீடியோ!!!

இந்த வகை பல்லிகள், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஓசேனியா பகுதிகளில் மட்டும் வாழ்பவை.

ராட்சத பல்லி vs ரெண்டு நாய்… சண்டையில் வெற்றி பெற்றது யார்..? - அலறவிடும் வைரல் வீடியோ!!!

இந்தியாவைப் பொறுத்தவரை வங்க மானிட்டர் பல்லி மிகவும் பரிட்சியமானது.

உத்தரகாண்டின் பவுரி மாவட்டத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, பலர் புருவங்களை உயர்த்தியுள்ளன. காரணம் அந்த வீடியோவில் ஒரு ராட்சத பல்லியும் இரண்டு நாய்களும் மூர்க்கமாக சண்டையிடுகின்றன. மிகவும் விநோதமான இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோவில் Monitor Lizard என்னும் ராட்சத பல்லி, மரம் ஒன்றில் ஏறப் பார்க்கிறது. ஆனால், அதன் வாலைப் பிடித்து இழுக்கின்றன இரண்டு நாய்கள். தன்னால் முடிந்த வரை, இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க மரத்தின் மீது தத்தி தத்தி ஏறப் பார்க்கிறது பல்லி. ஆனால், நாய்கள் பல்லியை இரையாக்கத் துடிக்கின்றன. விடாமல் வாலைப் பிடித்து இழுக்கின்றன. ஒரு கட்டத்தில் பல்லி மரத்திலிருந்து தொப்பென்று கீழே விழுகிறது. நாய்கள் வெற்றியடைந்ததாக நினைக்கின்றன. விடாமல் போராடுகிறது பல்லி. 

இந்த மொத்த சம்பவத்தினையும் வீடியோவாக எடுத்து வந்த நபர்கள், குறுக்கிட்டு நாய்களை சம்பவ இடத்திலிருந்து விரட்டுகின்றனர். இதனால் பல்லி பத்திரமாக மீட்கப்பட்டது. 

அலறவிடும் வீடியோவைப் பார்க்க: 

இந்த வகை பல்லிகள், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஓசேனியா பகுதிகளில் மட்டும் வாழ்பவை. சுமார் 80 வகை மானிட்டர் பல்லிகள் உலகில் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வங்க மானிட்டர் பல்லி மிகவும் பரிட்சியமானது. நாட்டின் பல மூளைகளிலும் இந்தப் பல்லி வாழ்கின்றது. 

இந்த வீடியோவுக்குக் கீழ் கருத்திட்ட சிலர், மனித்ரகள் தலையிட்டுப் பல்லியைக் காப்பாறியது குறித்து பாராட்டினார்கள். ஆனால் இன்னொரு தரப்பினரோ, இயற்கையின் உணவுச் சங்கிலியில் இப்படி வெளி நபர் ஊடுருவல் இருக்கக் கூடாது என்றும் விமர்சித்தனர். 

Click for more trending news