இந்த நாயும் குட்டிப் பெண்ணும் ஆடுற டான்ஸ் பாருங்க… மகிழவைக்கும் வைரல் வீடியோ!

Viral Video: இந்த வீடியோ ஆன்லைனில் படுவைரலாக மாறியுள்ளது.

இந்த நாயும் குட்டிப் பெண்ணும் ஆடுற டான்ஸ் பாருங்க… மகிழவைக்கும் வைரல் வீடியோ!

Viral Video: இதுவரை இந்த வீடியோ 50 லட்சம் முறை பார்க்கப்பட்டு, 3 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது.

Viral Video: வீட்டிலிருந்து வேலை செய்வது, வெளியில் எங்கும் போக முடியாத சூழல் உள்ளிட்டவற்றால் விரக்தியில் இருக்கிறீர்களா..? அப்படியென்றால், குட்டிப் பெண்ணும் நாயும் சேர்ந்து ஆடும் இந்த நடன வீடியோவைப் பார்த்தால் ஹாப்பி ஆகிடுவீங்க. 

கேரி லெவான் என்பவரால், இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டது. வீடியோவில் கேரியின் வீட்டுச் செல்லப் பிராணியும், அவரது மகளும் மெய் மறந்து நடனமாடுகிறார்கள். அந்த கியூட் நாயின் பெயர் ஓடிஸ். 

எதோ அனிமேஷன் படங்களில் வரும் காட்சி போல இது தெரிந்தாலும், இந்த வீடியோவை மேலும் அழகாக்குவது ஓடிஸின் ரியாக்‌ஷன்கள்தான். வீடியோவில், அறை முழுவதும் நடனமாடும் ஓடிஸ், பார்ப்போரை ஒரு கணம் அனைத்தையும் மறந்து புன்முறுவலிட வைக்கிறது. 

கேரி, வீடியோவுடன், “நீங்கள் சிரிக்க நினைத்தால்… எனது நாய் ஓடிஸுடன் என் மகள் நடனமாடுகிறாள்,” என்று மகிழ்ச்சித் ததும்பப் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ ஆன்லைனில் படுவைரலாக மாறியுள்ளது. இதுவரை இந்த வீடியோ 50 லட்சம் முறை பார்க்கப்பட்டு, 3 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது. 

வீடியோக்குக் கீழ் பலரும், இந்த வீடியோவைப் பகிர்ந்தமைக்காக கேரிக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். சிலர், ஓடிஸின் உருவத்தை வியந்து பாராட்டி வருகிறார்கள்.

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com