This Article is From Nov 06, 2019

அரசியல் தலைவர்களே நியூசிலாந்து பிரதமரிடம் இருந்து கற்று கொள்ளுங்கள்!! - வைரல் வீடியோ

இந்த வீடியோவை பலரும் பாராட்டி பதிவிட்டுள்ளனர்

அரசியல் தலைவர்களே நியூசிலாந்து பிரதமரிடம் இருந்து கற்று கொள்ளுங்கள்!! - வைரல் வீடியோ

ஜாசிந்தா அர்டனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது

அரசியல் தலைவர்கள் ஏதேனும் ஓர் சிறிய நல்ல காரியம் செய்தாலும் அதனை பொதுகூட்டம் நடத்தியும் புத்தக அளவிலான அறிக்கைகளை வெளியிட்டும் தங்களது பெருமையை பரப்புவார்கள். ஆனால் இதில் நியூசிலாந்தின் பிரதமர் விதிவிலக்கு.

நியூசிலாந்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் தனது அரசின் சாதனையை இரண்டே நிமிடத்தில் வரிசைப்படுத்தினார் நியூசிலாந்து பிரதமர் ஜாசிந்தா அர்தன்.

37 வயதில் நியூசிலாந்தின் பிரதமரான ஜாசிந்தா அர்தனின் இந்த வீடியோ தற்போது வைரல் ரகம். 92,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கியதில் இருந்து சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைத்து வரை அனைத்து சாதனைகளையும் 2 நிமிடம் 56 வினாடிக்குள் சொல்லி முடித்தார் ஜாசிந்தா.

அந்த வைரல் வீடியோ இதோ:

இந்த வீடியோவை பலரும் பாராட்டி பதிவிட்டுள்ளனர். ‘சிறந்த தலைவருக்கான எடுத்துகாட்டு' எனவும் பலர் கமண்ட் செய்துள்ளனர்.

Click for more trending news


.