ரயிலில் பயணித்த குட்டிக் குதிரை -பயணிகள் உற்சாகம்

குதிரை ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. விரைவில் பல பயணிகளின் விருப்பமான விலங்காக மாறியது.

ரயிலில் பயணித்த குட்டிக் குதிரை -பயணிகள் உற்சாகம்

குட்டி குதிரையின் புகைப்படம் ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

ஓக்லாண்ட் (Oakland station)  ரயில் நிலையத்தில் கலிபோர்னியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்வதற்கான ரயிலில் குட்டி குதிரை ஒன்று செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியாகவும் பொழுதுபோக்காகவும் அமைந்தது. 

இந்த குட்டிக் குதிரை ராக்ரிட்ஜ் நிலையத்தில் ரயிலில் ஏறியது. பே ஏரியா ரேபிட் டிரான்ஸிட் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின்ன குதிரை ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. விரைவில் பல பயணிகளின் விருப்பமான விலங்காக மாறியது. 

ட்விட்டரில் ஒருவர் “MADE MY DAY! So cuuuttttteeee!” என்று பகிர்ந்து குட்டி குதிரையின் படத்தை வெளியிட்டார். 

குட்டி குதிரையின் புகைப்படம் ஆன்லைனில் வைரலாகியுள்ளது. 5,800க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று கமெண்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது. 

Click for more trending news


More News