இரண்டு வாய் கொண்ட அதிசய மீன்....எங்கு சிக்கியது தெரியுமா?

லேக் காம்ப்ளேனில் தன் கணவருடன் மீன் பிடித்து கொண்டிருந்த போது தான் டெபி கெதர்ஸ் இந்த மீனை பிடித்தார்

இரண்டு வாய் கொண்ட அதிசய மீன்....எங்கு சிக்கியது தெரியுமா?

இணையதளத்தில் வைரலான புகைப்படம் இது தான்

நியூயார்க்கில் பெண் ஒருவர் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஒரு அரிய வகை மீனை பிடித்தார். பிடிப்பட்ட இந்த மீனில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் இந்த மீனுக்கு இரண்டு வாய்கள் உள்ளன.

லேக் காம்ப்ளேனில் தன் கணவருடன் மீன் பிடித்து கொண்டிருந்த போது தான் டெபி கெதர்ஸ் இந்த மீனை பிடித்தார் என என்பிசி நீயூஸ் தெரிவித்தது.

‘எனது கண்னை என்னாலே நம்ப முடியவில்லை. நான் பிடித்த மீனுக்கு 2 வாய்கள் இருந்தன. அந்த மீனுடன் சில புகைப்படங்கள் எடுத்த பின் மறுபடியும் அதனை திரும்ப தண்ணீருக்குள்ளே விட்டு விட்டேன்' என்றார் டெபி கெதர்ஸ்.

இந்த மீன் புகைப்படமானது பேஸ்புக்கில்  Knotty Boys Fishing என்பதில் பதிவு செய்யப்பட்டது.

இணையதளத்தில் வெளியாகிய பின் இந்த புகைப்படத்தை 6000 பேர் பகிர்ந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான பேர் தங்களது கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.

‘இது பழைய காயம் போல் உள்ளது' என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். இதனை குறித்து உங்களின் கருத்தையும் பகிருங்கள்.

Click for more trending news


More News