அகத்தின் அழகு முகத்தில்; இணைய வைரலான பிஞ்சுகளின் 'காலணி' செல்ஃபி!

இந்த சிறு குழந்தைகளின் உண்மையான கலப்படமில்லாத சந்தோசம், இந்த புகைப்படத்தை பார்க்கும் நம்மையும் சந்தோசப்படுத்துகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
அகத்தின் அழகு முகத்தில்; இணைய வைரலான பிஞ்சுகளின் 'காலணி' செல்ஃபி!

வைரலான அந்த செல்பி எடுக்கும் புகைப்படம்


செல்பி – உலகில் அனைத்துமே இப்போது செல்பி மயம் ஆகிவிட்டது. உண்ணும் உணவு, உடுத்தும் உடை என அனைத்தும் செல்பி ரகம் தான்.

இப்போது அப்படிபட்ட செல்பி ஒன்று வைரல் ஆகியுள்ளது. ஆனால் இந்த செல்பி கள்ளக்கபடமற்ற குழந்தைகளின் சிரிப்பால் வைரல் ஆனது. மேலும் இது செல்போனில் எடுத்த செல்வி இல்லை. காலணியை வைத்து செல்பி எடுப்பது போல் போஸ் கொடுக்கும் புகைப்படமாகும்.

இதனை பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். பாலிவுட் நடிகரான போமன் இராணி ‘நீங்கள் எந்த அளவு சந்தோசமாக இருக்க விரும்புகிறீர்களோ அந்த அளவே சந்தோசமாக இருப்பீர்கள்' என கேப்சன் உடன் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

 

இந்த புகைப்படம் இப்போது பல லைக்ஸ் கமண்ட்ஸ் உடன் வைரல் ஆகியுள்ளது.

இது போட்டோசாப் செய்யப்பட்டதோ என பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கேட்டுள்ளார். இதற்கு பலர் இல்லை இது உண்மையான படம் தான் என தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

 

 

 

எது என்னவோ, இந்த சிறு குழந்தைகளின் உண்மையான கலப்படமில்லாத சந்தோசம், இந்த புகைப்படத்தை பார்க்கும் நம்மையும் சந்தோசப்படுத்துகிறது.

Click for more trending news


NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................