Work From Home பண்றீங்களா..?- அப்ப இந்த ‘கல கல’ மொமென்ட்ஸ் உங்களுக்குத்தான்!!

கொரோனா வைரஸ், இதுவரை 143 நாடுகளுக்குப் பரவியுள்ளது. 7,000 பேருக்கு மேல் இந்த நோயால் இறந்துள்ளனர்.

Work From Home பண்றீங்களா..?- அப்ப இந்த ‘கல கல’ மொமென்ட்ஸ் உங்களுக்குத்தான்!!

சிலருக்கோ வீட்டிலிருந்து பணி செய்வதால், தங்களின் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது என்கிறார்கள்.

கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மற்றவர்களுக்கு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. சோசியல் டிஸ்டன்சிங் என சொல்லப்படும் இந்த செயலைப் பின்பற்ற, மற்றவர்களிடத்திலிருந்து சுமார் 3 அடியாவது தள்ளியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சுலபமாகப் பரவக்கூடிய இந்த கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, பல துறைகளைச் சார்ந்த ஊழியர்களும் வீட்டிலிருந்தபடியே பணி செய்து வருகிறார்கள். இந்த Work from home செய்பவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இது குறித்த மீம்ஸ்தான் தற்போது சமூக வலைத்தள டிரெண்டாக மாறியுள்ளது. 

மத்திய அரசும் கடந்த திங்கட்கிழமை, நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் பலர், மீம்ஸ்களால் ரகளை செய்து வருகிறார்கள். இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் யுக்தி குறித்தும் பலர் வேடிக்கையாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். 

அதில் சிலவற்றைப் பாருங்கள்:

ஆனால், சிலருக்கோ வீட்டிலிருந்து பணி செய்வதால், தங்களின் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது என்கிறார்கள். வீட்டிலிருந்து பணி செய்பவர்களுக்கு அவர்களின் வளர்ப்புப் பிராணிகள் எப்படி இடையூறு செய்கின்றது என்பது குறித்தும் பலர் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். 

கொரோனா வைரஸ், இதுவரை 143 நாடுகளுக்குப் பரவியுள்ளது. 7,000 பேருக்கு மேல் இந்த நோயால் இறந்துள்ளனர். இந்த உலகளாவிய தாக்கத்தால் பங்குச் சந்தைகள், வியாபாரங்கள் என பலவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com