குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை!! கண்ணீர் புகை குண்டுகளால் பதற்றம்!

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. பதற்றம் நிறைந்த இடங்களில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தலைநகர் லக்னோ உள்பட சில இடங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Lucknow:

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால்அங்கு பெரும் பதற்றம் காணப்படுகிறது. 

இன்று மதியம் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ  வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. 

பல மாவட்டங்களில் மொபைல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முசாபர் நகர், பரைச், புலந்த்சாகர், கோரக்பூர், பிரோசாபாத், அலிகார், பருகாபாத் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. 

டெல்லி ஜாமா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் காணப்பட்டது. 
 

.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில், இன்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையையொட்டிகூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததாகவும், போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மார்க்கெட் பகுதிகளிலும் இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

புலந்த்சாகர் மாவட்டத்தில் இன்டர்நெட் சேவை நிறுத்தை வைக்கப்பட்டிருந்தது. போலீஸ் வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. 

6l8h1ijo

உத்தரப்பரிதேசம், அசாம், டெல்லியிலும் இன்று போராட்டங்கள் வன்முறையாக மாறின. கடந்த ஞாயிறன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளன. 

கோரக்பூரில் இன்றைய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக  இரண்டு நிமிட வீடியோயை , செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டது. இதில் போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. போலீசாரின் கையில் துப்பாக்கி இருப்து போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளன. முதலில் நடவடிக்கை ஏதும் எடுக்காத போலீசார் கல்வீச்சுக்கு பின்னர் நடவடிக்கை எடுத்தனர். 

லக்னோவில் போராட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. 10 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சம்பல் நகரில் பேருந்து ஒன்று எரிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியிலும் போராட்டங்கள் நடந்தன. 

More News