''பாமகவினர் அதிகம் உள்ள இடங்களில்தான் வன்முறை நடக்கிறது'' - கே.ஜெயக்குமார் காட்டம்!!

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பியில் ஏற்பட்ட வன்முறை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''பாமகவினர் அதிகம் உள்ள இடங்களில்தான் வன்முறை நடக்கிறது'' - கே.ஜெயக்குமார் காட்டம்!!

கைப்பற்றப்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கே.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.


பாமகவினர் அதிகம் உள்ள இடங்களில்தான் வன்முறை நடக்கிறது என்று பொன்பரப்பி கிராமத்தை பார்வையிட்ட பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் கே.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சமூக விரோத செயல்படும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் வன்முறைக்குள்ளான இடங்களை காங்கிரஸ் கட்சியின் தமிழக செயல் தலைவர் கே.ஜெயக்குமார் பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற வகையில் வன்முறையாளர்கள் ஆயுதங்களை கொண்டு வந்துள்ளனர். தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம், அவர்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்ற போலியான குற்றச்சாட்டுதான் காலங்காலமாக வைக்கப்படுகிறது. 

c6d8qgh8

பூத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக் கூட்டங்களிலேயே பேசியிருக்கின்றார். அவரது மகன் அன்புமணி, பொதுக் கூட்டம் ஒன்றில் வாக்களிக்கும் இடத்தில் யார் இருக்கப் போகிறார்கள்; நாம்தானே இருக்கப் போகிறோம். நாம் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். 

பாமக இருக்கும் இடத்தில்தான் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் பாப்பிரெட்டி பகுதி. அங்கு 50 வாக்குச்சாவடிகளை பாமக கைப்பற்றியுள்ளது. 

வேலூரில் கீழ் விசாரம் என்ற இடத்தில் பாமகவினர் வாக்குச் சாவடியை கைப்பற்றியுள்ளனர். அதன் தொடர்ச்சிதான் பொன்பரப்பி கிராமத்திலும் நடந்திருக்கின்றது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக தேர்தல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் தொகுதியான நான் போட்டியிட்ட திருவள்ளூர் தொகுதியில் 1,272 பூத்துகள் அங்கு உள்ளன. அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 

563uc5ig

திட்டமிடப்பட்டது என்பதால் இங்கு மட்டும் வன்முறை நடந்துள்ளது. பாமகவினர் அதிகமாக உள்ள இடங்களில் வன்முறை நடக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் தைரியமாக இருப்பது அவசியம். சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். கைப்பற்றப்பட்ட வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும். 
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................