‘தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போர் இது!’- வாய் திறந்தார் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போர் இது!’- வாய் திறந்தார் விஜயகாந்த்

விரைவில் வருவேன். என்ன பேசுவேன்னு அங்க வந்து கேட்கச் சொல்லுங்க- விஜயகாந்த்


தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். அவர் விரைவில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதன் முறையாக தற்போதைய அரசியல் சூழல் குறித்து விஜயகாந்த் பேசியுள்ளார்.

பேட்டியிலிருந்து,

கேள்வி: எப்படி இருக்கீங்க கேப்டன்?

பதில்: நல்லா இருக்கேன் சார்.

கே: உடல்நிலை எப்படி இருக்கு கேப்டன்?

ப: உடல்நிலை நல்லாவே இருக்கு.

கே: அமெரிக்கா போய்ட்டு வந்த அப்புறம் எந்தளவுக்கு தேறி இருக்கீங்க?

ப: நல்லா இருக்கேன்.

கே: எப்போது தேர்தல் பிரசாரத்துக்கு வந்து பேசுவீங்க. என்ன பேசுவீங்க?

ப: விரைவில் வருவேன். என்ன பேசுவேன்னு அங்க வந்து கேட்கச் சொல்லுங்க. 

கே: அப்ப தொடர்ச்சியா பிரசாரம் பண்ணுவீங்களா?

ப: இல்லை, அதை டாக்டர் கிட்ட கேட்டுதானே சொல்ல முடியும்.

கே: அதிமுக - தேமுதி கூட்டணி எப்படி இருக்கு கேப்டன்?

ப: அண்ணா திமுக கூட்டணி ஜெயிக்கும். திமுக கூட்டணி தோற்கும். 

கே: ஏன் திமுக கூட்டணி தோற்கும்னு சொல்றீங்க?

ப: திமுக தில்லு முல்லு கட்சி.

கே: திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையிலான போட்டி எப்படி இருக்கு கேப்டன்?

ப: தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற போட்டி அது.

கே: அதில் நிச்சயமா அதிமுக- தேமுதிக கூட்டணி வெற்றி பெறுமா?

ப: தர்மம் தான் ஜெயிக்கும். 

கே: பிரதமர் மோடியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

ப: பிரதமர் மோடி நல்லவர். மீண்டும் அவர் ஆட்சிக்கு வர வேண்டும்.

கே: தேமுதிக தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

ப: நல்லா உழைக்க வேண்டும். 40-ம் ஜெயிக்க வேண்டும். 

இந்த சிறப்புப் பேட்டி, விஜயகாந்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. பேட்டியின்போது விஜயகாந்த், தொடர்ந்து பேசுவதற்கு சிரமப்பட்டார். காணொளியில் நிறைய எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................