கடன் பாக்கி; ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்த் வீடு, கல்லூரி.!! அதிர்ச்சியில் தேமுதிகவினர்.!!

வங்கியில் கடனாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தாதது காரணமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்துக்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கடன் பாக்கி; ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்த் வீடு, கல்லூரி.!! அதிர்ச்சியில் தேமுதிகவினர்.!!

விஜயகாந்த், பிரேமலாத தங்களது பெயரில் உள்ள வீடு, கல்லூரியை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் பெற்றுள்ளனர். இதில், ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக அவரது சொத்துக்களை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இன்றைய நாளிதழ்களில் விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடன் பாக்கியை செலுத்தாததால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26-ல் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்திற்கு வருகிறது. சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம், வணிக கட்டிடமும் ஏலத்துக்கு விடப்படுகிறது.

ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. கடன் பாக்கி, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் வீடு, கல்லூரி மற்றும் அவரது இதர சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதை அறிந்த தேமுதிகவினர் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................