This Article is From Jun 26, 2018

பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா!

தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியி நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மல்லையா மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது
  • கைது செய்வதற்கு முன்னரே இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார் மல்லையா
  • குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மல்லையா இங்கிலாந்தில் வாதாடி வருகிறார்
New Delhi:

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியி நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து லண்டனில் பேசிய மல்லையா, ’2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ஆகிய இருவருக்கும், எனது பிரச்னை குறித்து கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. பொதுத் துறை வங்கிகளுடன் எனக்கு நிலவி வரும் பிரச்னையை சரி செய்ய அனைத்து விதத்திலும் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால், அரசியல் காரணங்களுக்காக நான் பயன்படுத்தப்பட்டால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ விளக்கம் அளித்துள்ளார். 

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப கொடுக்கமல் இருக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது சிபிஐ வழக்குத் தொடுத்தது. ஆனால், கைது செய்யும் முன்னரே இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றார் மல்லையா. தொடர்ந்து அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசும் சிபிஐ அதிகாரிகளும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அவர் தொடர்ந்து இங்கிலாந்தில் இது தொடர்பான வழக்கில் வாதாடி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு அன்றே பிணையில் வெளி வந்தது குறிப்பிடத்தக்குது. தொடர்ந்து அவர் பிணையில் தான் இருந்து வருகிறார். 

இந்நிலையில், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மல்லையா வெளியிடுள்ளது குறிப்பிடத்தக்கது. மல்லையா எழுதிய கடிதத்தின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 


 

.