This Article is From Feb 05, 2019

ஃபோர்ப்ஸ் பட்டியலில் நம்ம விஜய் தேவரகொண்டா...!!!

ஒவ்வொரு வருடமும் 30 வயதிற்கு உட்பட்ட 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது ஃபோர்ப்ஸ் இந்தியா.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் நம்ம விஜய் தேவரகொண்டா...!!!

ஹைலைட்ஸ்

  • நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த பட்டியலில் உள்ளார்
  • கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மண்டானா இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்
  • விளையாட்டு வீரர்கள் ஹீமா தாஸ் மற்றும் நீரஜ் சோப்ராவும் உள்ளனர்

ஒவ்வொரு வருடமும் 30 வயதிற்கு உட்பட்ட 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது ஃபோர்ப்ஸ் இந்தியா.

தனி மனித சாதனையாளர்களின் தாக்கம், அவர்கள் செயல்படும் சூழலை மாற்றும் திறன், அவர்கள் வேலையின் செயல்பாடு மற்றும் அந்த தொழிலில் நிலைத்து நிற்கும் திறன் என நான்கு  அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா இடம் பெற்றுள்ளார். அர்ஜுன் ரெட்டி படம் மூலம் இந்தியா மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, ‘ரெளடி' என்னும் ஆன்லைன் துணி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா என ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா படத்தில் அறிமுகம் ஆனார் இவர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவரது அர்ஜுன் ரெட்டி படமானது ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் ரீ மேக் செய்யபடுகிறது. இவரது அடுத்த படம் ‘Dear Comrade' ஆகும்.

 

 

இது குறித்து விஜய் தேவரகொண்டா, தன் சமூக வலைத்தளத்தில் '5 வருடங்களுக்கு முன் என் வங்கி கணக்கில் 500 ரூபாய் கூட இல்லை. இன்றோ ஃபோபர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளேன். என் தந்தை என்னிடம் 30 வயதிற்குள் வெற்றி பெற்று விடு என்பார். அப்போது தான் உன் வெற்றியை நீ அனுபவிக்க முடியும். உன் பெற்றோர்களும் உன்னால் பெருமை அடைவார்கள்' என பகிர்ந்துள்ளார்.

 

gl7auiu

 

மேலும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துவக்க வீராங்கனையான ஸ்மிரிதி மண்டானாவும் இந்த பட்டியலில் உள்ளார். ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருது, உலக கோப்பையில் சூப்பர் பார்ம், ஐசிசி தரவரிசையில் முதல் இடம் என டாப் பார்மில் இருக்கிறார் மண்டானா.

இந்த பட்டியலில் இருக்கும் மற்றொரு பிரபலம் தடகள வீராங்கனையான ஹீமா தாஸ். 2018 ஆசிய போட்டியின் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம், 4x400 ஓட்ட பந்தயத்தில் தங்கம் என பல சாதனைக்கு சொந்தக்காரர் இந்த 19 வயதான ஹீமா தாஸ்.

இவர்களை தவிர விவசாயம் சம்பந்தப்பட்ட நின்ஜாகார்ட் நிறுவனர்கள் அஷுதோஸ் விக்ரம் மற்றும் கார்த்திஸ்வரன், விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா முதலியவர்களும் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.

.