"நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு" - விஜய்-அஜித் ரசிகர்கள் மேல் கடுப்பான அஸ்வின்!

மிக தீவிர விஜய் ரசிகர்கள் பழைய ஹாஷ்டேக்கை தோற்கடிக்கும் விதமாக #LongLiveVijay என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கினர்.

நடிகர் விஜய் மரணம் என்ற பொய்யான ஹாஷ்டேக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டில் பரவி வந்தது.

ஹைலைட்ஸ்

  • விஜய் மற்றும் அஸ்வின் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்
  • இதற்கு காரணம் அஜித் ரசிகர்கள் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்
  • விஜய்க்கு அடுத்த படமாக பிகில் வெளியாகவுள்ளது
New Delhi:

நடிகர் விஜய் மரணம் என்ற பொய்யான ஹாஷ்டேக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டில் பரவி வந்தது. அதனை கண்டித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட் செய்துள்ளதார். விஜய் மற்றும் அஸ்வின் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். #RIPActorVijay மற்றும் #RIPVijay  போன்ற ஹாஷ்டேக்குள் ட்விட்டரில்  ட்ரெண்ட் ஆனதால், விஜய் ரசிகர், அஜித்தை நோக்கி அம்பு வீசத் தொடங்கினர். இந்த ட்விட்டில் அஸ்வின், நாட்டில் ஏற்கெனவே நிறைய பிரச்னை உள்ளது என்றும் ஹாஷ்டேக் பயன்படுத்துபவர்கள் ஏதேனும் நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தலாம் என்றும் கூறினார். "நசில நாட்களுக்கும் முன்னர் சிறிய கல் ஒன்று நமது கிரகத்தை தாக்கியது, பருவநிலை மாற்றம் சில பகுதிகளை பாதிக்கிறது, நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த அழகான மாநிலத்தின் இளைஞர்கள் #RIPActorVIJAY என்ற ஹாஷ்டெக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்" என்று பதிவிட்டார்.

நடிகர்களுக்காக ரசிகர்கள் சண்டை போடுவது என்பது புதிய விஷயமல்ல. ஆனால், விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிக தீவிர விஜய் ரசிகர்கள் பழைய ஹாஷ்டேக்கை தோற்கடிக்கும் விதமாக #LongLiveVijay என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கினர். ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்னைக்கு: " அதிகபடியாக நீங்கள் காட்டும் வெறுப்பு உங்களை அழித்துவிடும்... விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மூத்த தலைமுறை ஹீரோக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்".

கடைசியாக விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது.

Newsbeep

சிவா இயக்கத்தில் விஸ்வாசம் அஜித்துக்கு வெளியான கடைசி படம். அஜித் அடுத்து நேர்கொண்ட பார்வை வெளியாகவுள்ளது. இது பாலிவுட் பிங்க் திரைப்படத்தின் மறு ஆக்கம். இதை போனி கப்பூர் தயாரிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அஜித்தின் அடுத்த படமாக  AK60 என்று தகவல் வெளியிட்டுள்ளார்.