ஓட்டல் பொருட்களை வாரிச்சுருட்டிய இந்தியக் குடும்பம் மாட்டிக்கொண்ட தருணம்! #ViralVideo

கடந்த சனிக்கிழமை இந்த வீடியோ, ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது.

ஓட்டல் பொருட்களை வாரிச்சுருட்டிய இந்தியக் குடும்பம் மாட்டிக்கொண்ட தருணம்! #ViralVideo

வீடியோவில், ஓட்டல் ஊழியர்கள், குடும்பத்தினரின் பெட்டிகளில் சோதனையிடுவதும், அதில் ஓட்டலின் பல பொருட்கள் இருப்பதும் தெரிகிறது

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற ஓர் இந்தியக் குடும்பம், தாங்கள் தங்கியிருந்த ஓட்டல் பொருட்களை திருடியுள்ளனர். அவர்கள் உடைமைகளை சோதனையிட்டபோது கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பாலியில் உள்ள ஓட்டலுக்கு வெளியே எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

வீடியோவில், ஓட்டல் ஊழியர்கள், குடும்பத்தினரின் பெட்டிகளில் சோதனையிடுவதும், அதில் ஓட்டலின் பல பொருட்கள் இருப்பதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள், “இது குறித்து விள்ளம் கொடுங்கள்“ என்கிறார்கள்.

அதற்கு அந்தக் குடும்பத்தினர், “மன்னித்துவிடுங்கள். நாங்கள் அதற்குக் கூடுதல் பணம் கொடுத்து விடுகிறோம்” என்கின்றனர். உடனே ஓட்டல் ஊழியர், “உங்களிடம் அதிக பணம் இருக்கும். ஆனால், இது மரியாதை குறைவான செயல் அல்லவா” என்கிறார். 

கடந்த சனிக்கிழமை இந்த வீடியோ, ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து பலர் இந்த வீடியோவைப் பகரிந்து, அந்த இந்தியக் குடும்பத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர். 

வீடியோவைக் காண:

ஒரு ட்விட்டர் பயனர், “இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் நம் நாட்டின் தூதர்கள். எனவே, ஒழுக்கத்துடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் மானத்தை வாங்கும் நபர்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று ஆதங்கப்பட்டார். 

இன்னொருவர், “ஒரு இந்தியக் குடும்பம் பாலியில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் திருடிக் கொண்டு மாட்டிக் கொண்ட வீடியோவைப் பார்க்க மிகவும் வெட்கமாக இருக்கிறது” என்று வருத்தப்படுகிறார். 

நடிகை மினி மத்தூரும் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். “இந்தியாவின் மானத்தை வாங்கும் இந்தியர்கள் இவர்கள். பாலி ஓட்டலில் இருந்து கை கழுவும் லிக்விட், அறை அலங்காரப் பொருட்கள், ஹேர் ட்ரையர் உள்ளிட்டப் பொருட்களை அவர்கள் திருடியுள்ளனர். குறிப்பாக வீடியோ முடிவில், அந்த குடும்பத்தின் ஆண் ஒருவர் ஓட்டல் ஊழியரிடம் கெஞ்சுவது மிகவும் அறுவறுக்கவைக்கிறது” என்று பொங்கியுள்ளார். 

Click for more trending news