இலங்கை குண்டுவெடிப்பு : ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்து சென்ற தீவிரவாதி! வீடியோ வெளியானது!!

இலங்கை உள்ளூர் செய்தி சேனலில் வெளியான வீடியோ காட்சியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. நீல நிற தொப்பி, பேக் பேக்குடன் எலிவேட்டரில் நடந்து செல்லும் வீடியோ வெளிவந்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு : ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்து சென்ற தீவிரவாதி! வீடியோ வெளியானது!!

பேக் பேக்குடன் நடந்து செல்பவர்தான் தற்கொலைப்படை தீவிரவாதியாக இருக்கும் என கருதப்படுகிறது.

New Delhi:

இலங்கையில் பிரபல ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. மொத்தம் 6 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 320-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

கொழும்புவில் சர்வதேச அளவில் பிரபலமான ஷாங்ரி லா ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாட்டவர்கள் வழக்கமாக வந்து செல்கின்றனர். அவர்களை குறிவைத்து கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பான வீடியோ உள்ளூர் சேனல்களில் வெளியாகியுள்ளது. இதனை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சரியாக ஒரு நிமிடம் 5 விநாடிகள் இந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன. 

தலையில் ஊதா நிறத் தொப்பி அணிந்த ஒருவர் பேக் பேக்குடன் நட்சத்திர ஓட்டலில் சந்தேகப்படும்படி நடந்து செல்கிறார். அவர்தான் தற்கொலைப்படை தீவிரவாதியாக இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. 

நேற்று புனித செபாஸ்டியன் சர்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகள் வெளிவந்தன. நிகோம்போவில் நடந்த இந்த சம்பவத்திலும் பேக் பேக் அணிந்த ஒருவர் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். 

வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பாக 2 மணி நேரத்திற்கு முன்பு இலங்கைக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இருப்பினும், இந்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படாததால் அசம்பாவிதம் நடந்திருக்கிறது. இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Listen to the latest songs, only on JioSaavn.com