அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய சிஇஓ!! - குவியும் பாராட்டுகள்! - வீடியோ!

வெல்ஸ்பன் நிறுவனத்தின் இந்திய சிஇஒ தீபாலி கோயங்கா ’முக்காபுலா’ பாடலுக்கு நடமாடினார்.

அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய சிஇஓ!! - குவியும் பாராட்டுகள்! - வீடியோ!

வெல்ஸ்பன் நிறுவனத்தின் இந்திய சிஇஒ தீபாலி கோயங்கா ’முக்காபுலா’ பாடலுக்கு நடமாடினார்.

வெல்ஸ்பன் நிறுவனத்தின் இந்திய சிஇஓ தீபாலி கோயங்கா தனது அலுவலக ஊழியர்களுடன் நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் நேற்றைய தினம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில், ஸ்ட்ரிட் டான்ஸர் 3டி படத்தின் முக்கபுலா பாடலுக்கு வெல்ஸ்பன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிர்வாக இயக்குநரும் நடமாடுகின்றனர். 

தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், தீபாலி கோயங்கா தனது அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடுகிறார். இதைத்தொடர்ந்து, மற்ற ஊழியர்களும் அவரது அசைவுகளுக்கு ஏற்ப நடனமாடுகின்றனர். அந்த வீடியோவின் இறுதியில் அனைத்து ஊழியர்களும் கோயங்காவை பாராட்டுகின்றனர். 

இந்த வீடியோவானது ட்வீட்டரில் 1 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆரோக்கியமான வேலை கலாச்சாரம் என கோயங்காவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதனை பார்த்த ஆர்பிஜி என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குநர் ஹர்ஷ் கோயங்காவும், ”பணி இடத்தில் மகிழ்ச்சியான கலாச்சாரத்தை” உருவாக்கியதற்காக வெல்ஸ்பன் தலைமை நிர்வாக இயக்குநரை பாராட்டியுள்ளார். 

இதுபோன்று அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் நடனமாடி பார்ப்பது அறிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

அவரது கருத்துக்கு ட்வீட்டரில் தீபாலி கோயங்காவும் பதில் பதிவிட்டுள்ளார். அதில், ஹர்ஷ்க்கு நன்றி தெரிவித்த அவர், இது போன்ற பணி இடம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதை தான் மகிழ்வதாகவும் "#WorkPlaceHappy" என்ற ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்த வீடியோவை தொழிலதிபர்களான ஆனந்த் மகேந்திரா, கவுதம் அதானி மற்றும் கிரண் மஜூதார் உள்ளிட்டோருடன் பகிர்ந்த தீபாலி, இதுவே என்னுடைய மகிழ்ச்சியான பணியிடம் #WorkPlaceHappy. உங்களுடையது என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள், தீபாலியை பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.  

இந்த வீடியோ குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் பகுதியில் பதிவிடவும். 

 

Listen to the latest songs, only on JioSaavn.com