கழிப்பறை தண்ணீரை உணவுக்கு பயன்படுத்தும் வீடியோ: விசாரணை தொடங்கியது

அதிகாரிகள் வீடியோவில் அந்த செயலை செய்யும் நபர் கிடைத்து விட்டால் அவரின் லைசென்ஸை முறையாக பரிசோதித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்று தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கழிப்பறை தண்ணீரை உணவுக்கு பயன்படுத்தும் வீடியோ: விசாரணை தொடங்கியது
Mumbai: 

மும்பை தெருவோர விற்பனையாளரின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந்த வீடியோவில் போரிவலி ரயில்வே நிலையத்தில் உள்ள கழிப்பறைக் குழாய் தண்ணீரை உணவு சமைக்க பயன்படுத்துபோன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டபின் உணவும் மற்றும் மருந்துகள் மேலாண்மை அமைப்பு இது குறித்து விசாரணை நடத்தியது.

இந்த வீடியோவில் இட்லி கடை நடத்தி வருபவர் கழிப்பறைக் குழாய் தண்ணீரை பயன்படுத்தி சட்னி செய்யப் பயன்படுத்துகிறார். 45 நிமிட வீடியோவாக இது உள்ளது. இது என்ன தேதியில் எந்த நேரத்தி எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
 

சைலேஷ் ஆதவ் உணவு மற்றும் மருந்துகள் அமைப்பகத்தின் மும்பை கிளையின் ஆய்வாளர் பேசியபோது “இந்த வீடியோ எங்களின் கவனித்திற்கு வந்தது. இது குறித்த விசாரணையைத் தொடங்கினோம்.இந்த மாதிரி குறு வணிகர்கள் இந்த மாதிரி தண்ணீரை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. மக்கள் பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.

மேலும் அதிகாரிகள் வீடியோவில் அந்த செயலை செய்யும் நபர் கிடைத்து விட்டால் அவரின் லைசென்ஸை முறையாக பரிசோதித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்று தெரிவித்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................