Viral Video: பிரபலமான 'Believer’ பாப் பாடலை பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்

இந்த வீடியோ ட்விட்டரிலும் பகிரப்பட்டது அதில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்த்துள்ளனர்.

Viral Video: பிரபலமான 'Believer’ பாப் பாடலை பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்

பிரபலமான பாடலான ‘பிலிவர்’ பாடலை மாணவர்கள் குழு இசையாக பாடுகின்றனர்.

அமெரிக்க பாப் ராக் இசைக்குழுவான இமேஜின் டிராகன்களின் பாடல்கள் பெரும் ரசிகர்களை உருவாக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் பாப் இசைக்குழுவின் மிகவும் பிரபலமான பாடலான ‘பிலிவர்' பாடலை மாணவர்கள் குழு இசையாக பாடுகின்றனர். மாணவர்கள் பாடும் காட்சி ட்விட்டரில் வெளியானது . 

வீடியோ கடந்த வாரம் பள்ளியில் ஒரு ஆசிரியர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். மாணவர்கள் நீலநிற சீருடையில் பிரபலமான பாடலை கூட்டாக நின்று பாடுகின்றனர். இந்த வீடியோ 9 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ ட்விட்டரிலும் பகிரப்பட்டது அதில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்த்துள்ளனர். இந்த தகவல் முன்னணி பாடகர் டான் ரெனால்ட்ஸை அடைந்துள்ளது. அவரும் இந்த  வீடியோவை அழகாக இருப்பதாக பாராட்டியுள்ளார். 

பிற சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் மாணவர்களின் திறமையை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

மாணவர்களை ஒருங்கிணைத்த ஆசிரியருக்கும் பாராட்டுகள் குவிந்துள்ளன. 

Click for more trending news


More News