This Article is From May 22, 2018

சீனாவில் மாடியிலிருந்து தடுக்கி விழுந்த சிறுமியை காப்பாற்றிய நபர்! #வைரல் வீடியோ

சீனாவில் கட்டட மாடியிலிருந்து தடுக்கி விழுந்த சிறுமியைக் காப்பாற்றி, `ஹீரோ’-வாகியுள்ளார் ஒருவர்.

சீனாவில் மாடியிலிருந்து தடுக்கி விழுந்த சிறுமியை காப்பாற்றிய நபர்! #வைரல் வீடியோ

Several people have praised the salesman for his brave and selfless act.

ஹைலைட்ஸ்

  • தடுக்கி விழுந்த சிறுமியைக் காப்பாற்றி, `ஹீரோ’-வாகியுள்ளார் ஒருவர்
  • அந்த பரபரப்பான வீடியோதான் வைரலாகி உள்ளது.
  • `நீங்கள் ஒரு ஹீரோ’ என்று ஒரு ஃபேஸ்புக் யூசர் அவரைப் பாராட்டுகிற
சீனாவில் கட்டட மாடியிலிருந்து தடுக்கி விழுந்த சிறுமியைக் காப்பாற்றி, `ஹீரோ’-வாகியுள்ளார் ஒருவர். சிறுமியை அந்த நபர் காப்பாற்றிய திக் திக் நிமிடங்கள் எதேச்சையாக வீடியோவாக பதிவாகியுள்ளன. அந்த பரபரப்பான வீடியோதான் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

சீனாவின், சான்ங்கிங் மார்கெட்டில் கடந்த 15 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை மார்கெட்டின் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளது. சிறுமி மாடியிலிருந்து தவறி விழுவதற்கு முன்னர் அந்தச் சீன வியாபாரி, தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது, தன் கடையின் அருகில் ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார் அந்தச் சீன வியாபாரி. உடனடியாக, சிறுமி இருக்கும் இடத்தை நோக்கி விரைகிறார் அந்த வியாபாரி. இது அனைத்தையும் ஒரு சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து, இன்னொரு கேமராவில் அவர் ஒரு கட்டத்துக்குக் கீழே நிற்பது தெளிவாக தெரிகிறது. எதற்கோ அவர் மேலே பார்த்தது போல நிற்பது தெரிகிறது. ஆனால், எதற்கு என்று முதலில் பிடிபடவில்லை. சில கணங்கள் கடக்கின்றன. அவர் தொடர்ந்து கட்டடத்தின் உச்சியையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து அங்கு கடந்து செல்லும் பலரும் வியாபாரியை சூழ்ந்து நிற்கின்றனர். பின்னர் தான், மாடியின் மேல் சிறுமி நிற்பதை கூடி இருப்பவர்கள் உணருகின்றனர். அதைப் பார்த்து பதற்றம் அடைகின்றனர் குழுமியுள்ள மக்கள். ஆனால், அந்த சீன வியாபாரி நிதானமாக சிறுமியை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னர் தான் அந்த சம்பவம் நடக்கிறது. சிறுமி மாடியின் மீதிருந்து தவறி விழுகிறார். ஆனால், அந்தச் சீன வியாபாரி சரியாக அந்தக் குழந்தையைப் லாவகமாக பிடிக்கின்றார். இதனால், எந்த வித காயமுமின்றி சிறுமி காபாபாற்றப்படுகிறாள். பின்னர் நிதானமாக சிறுமியை ஆசுவாசப்படுத்த வியாபாரி அழைத்துச் செல்கிறார்.
 
 
 

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி சிறுமியைக் காப்பாற்றிய அந்தச் சீன வியாபாரியின் செயலை இணையதளத்தில் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். `நீங்கள் ஒரு ஹீரோ’ என்று ஒரு ஃபேஸ்புக் யூசர் சீன வியாபாரியைப் பாராட்டுகிறார். `அவரின் இந்த செயலை நம்பவே முடியவில்லை. செம ஆவ்ஸம்’ என்று இன்னொரு முகநூல் பயணர் புகழ்கிறார்.

இதைப் போலவே ஒரு வீடியோ சில நாள்களுக்கு முன்னர் வெளியாகி இன்டெர்நெட்டில் வைரலானது. அதில், மிக பலமான மழை பெய்து, வெள்ளம் தரையில் கரை புறண்டோடுகிறது. அப்போது, அங்கிருந்த சாதாரண மக்கள் பாதாள சாக்கடையில் அடித்துச் செல்ல இருந்த சிறுவனைக் காப்பாற்றுகின்றனர். தன்னலமின்றி பொது மக்கள் பலர் இணைந்து செயல்பட்டு சிறுவனை காப்பாற்றியது பலரை நெகிழ வைத்தது.

 
.